இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

Toilet
Toilet
Published on

தொழில்நுட்ப உலகம் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சில பழக்கங்கள் நம் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அத்தகைய பழக்கங்களில் ஒன்றுதான், கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவது. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில், கழிப்பறையிலும் கூட அவற்றைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், இந்த சாதாரண பழக்கம் நம் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கழிப்பறையில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்:

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தென்மேற்கு மருத்துவ மையத்தைச் சேர்ந்த பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணரின் கூற்றுப்படி, கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

  • செரிமானப் பிரச்சனை: கழிப்பறையில் வெகு நேரம் உட்கார்ந்திருந்தால், புவியீர்ப்பு விசையானது உடலின் கீழ்ப்பாதியை கீழே இழுப்பதால், அழுத்தம் அதிகரித்து அது உங்கள் ரத்த ஓட்டத்தை பாதித்துவிடும். இதனால், செரிமானப் பிரச்சனை ஏற்படும். ஏற்கெனவே, செரிமானப் பிரச்னைகளுடன் போராடுபவர்களுக்கு இது இன்னும் பிரச்னையை அதிகரித்து விடும்.

  • மூல நோய்: அதிக நேரம் கழிப்பறையில் உட்கார்ந்திருப்பதால், ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலைச் சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் வீங்கி விடும். இப்படி நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் வீங்குவதால், மூல நோய் ஏற்படும் அபாயமும் அதிகமாகும்.

  • இடுப்புத்தசை பலவீனம்: அதிக நேரம் கழிப்பறையில் உட்காருவதால், இடுப்புத்தசைகளும் பலவீனமாகும். இது நீண்ட காலத்தில் இடுப்பு மற்றும் முதுகு வலிகளுக்கு வழிவகுக்கும்.

  • ஹீமராய்ட்ஸ்: இது மூல நோயின் மற்றொரு வடிவமாகும். இதில் ஆசனவாயின் ரத்த நாளங்கள் வீங்கி, அரிப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!
Toilet

இதற்கு என்ன தீர்வு?

கழிப்பறைக்கு சென்றவுடன் உங்கள் வேலையை முடித்துவிட்டு வெளியே வர முயற்சி செய்யுங்கள். கழிப்பறையில் செல்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், அதை குறைக்க முயற்சி செய்யுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் செரிமானத்தை சீராக வைத்துகொள்ளலாம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலைத் தடுக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை எளிதாக்கும்.

கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். நம் ஆரோக்கியம் நம் கையில்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com