மழையால் உங்க வீட்டு பாயில் பங்கஸ் உள்ளதா? இதோ அதனை சரிசெய்ய டிப்ஸ்!

மழையால் உங்க வீட்டு பாயில் பங்கஸ் உள்ளதா? இதோ அதனை சரிசெய்ய டிப்ஸ்!
whatcaughtmyeyesite.files.wordpress.com

ழை காலத்தில் பல வகைகளிலும் நமக்கு தொல்லைகள் ஏற்படும். அதை சமாளிக்க சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது

எல்லோர் வீட்டிலும் சுருட்டி வைத்திருக்கக்கூடிய பாயில் மழை காலத்தில் பூசணம் பிடிக்கும் அந்த பாயை பிரித்துப் பார்த்தால் பாய் முழுவதும் வெள்ளை வெள்ளையாக பங்கஸ் வந்திருக்கும்.மழையில் பாயை நன்றாக கழுவி காய வைத்தாலும் காயாது.

என்ன செய்வது? பாயை சுருட்டி வைக்கும் போது அதன் உள்ளே நியூஸ் பேப்பரை விரித்து பாயை சுருட்டி வைக்க வேண்டும். பாயில் உள்ள ஈரப்பதத்தை நியூஸ் பேப்பர் உறிஞ்சிக்கொள்ளும். உங்கள் வீட்டுப் பாயை தரையில் விரியுங்கள் அதன் மேலே எத்தனை நியூஸ் பேப்பர் வைக்க முடியுமோ பாயின் அளவுக்கு நியூஸ் பேப்பரை வைத்துவிட்டு பாயை சுருட்டி வைத்தால் பூஞ்சை தொற்று நீங்கும்.

மழை பெய்து கொண்டே இருக்கும்போது திடீரென்று சில நேரம் இடையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வெயில் அடிக்கும். அப்போது ஈரமான எல்லா துணிகளையும் கொடியில் காய வைக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், துணிகளுக்கு தேவையான கிளிப்பு இருக்காது.

rukminim2.flixcart.com

அப்போது, தலைக்கு பயன்படுத்தும் குஷி கிளிப்பு ஹாங்கிங் கிளிப் ஹேர் பின் இருக்கும் அல்லவா அதை பெரும்பாலும் நிறைய வீடுகளில் அட்டை அட்டையாக வைத்திருப்போம் அந்த கிளிப்பை கொண்டு போய் துணியின் மேல் கிளிப்போல பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை சுலபமாகவும் எடுக்கமுடியும்.

கூடுமானவரை அடைமழை பெய்யும் போது மிதி அடியாக மேட்டை பயன்படுத்துவரை தவிர்ப்பது நல்லது. மேட்டு தடிமனாக இருப்பதால் அவ்வளவு எளிதில் காயாது. அதற்கு பதில் வீட்டில் இருக்கும் பழைய காட்டன் நைட்டி காட்டன் துணிகளை சதுரமாக வெட்டிக்கொண்டு நான்காக மடித்து நான்கு பக்கத்திலும் ஏதாவது ஒரு கிளிப் போல போட்டு மேட் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

பழைய நைட்டியில் புது மேட்
பழைய நைட்டியில் புது மேட்i.ytimg.com

இப்படிப்பட்ட காட்டன் துணிகள் ஈரமாகிவிட்டால் கூட சீக்கிரமாக துவைத்து சீக்கிரமாக காய வைத்துக் கொள்ளலாம் இருப்பினும் வாசலில் பாத்ரூமில் மேட் போட்டால் தான் வழுக்காமல் இருக்கும் என்பவர்கள் மேட் ரொம்பவும் ஈரமாகிவிட்டது என்றால் இரவு தூங்கச் செல்லும்போது ஒரு நியூஸ் பேப்பரை அந்த மேட்டின் இரு பக்கமும் போட்டு வையுங்கள். இதனால், தேவையில்லாத ஈரப்பதத்தை அந்த நியூஸ் பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும்.

மழைக்காலத்தில் நமக்கு இருக்கக்கூடிய இன்னொரு பிரச்சனை பவர் கட்டு.உங்க வீட்ல இன்வெர்ட்டர் இருந்தால் கூட எப்போதுமே இரண்டு மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அது ரொம்ப ரொம்ப முக்கியம். மெழுகுவர்த்தியை ப்ரீசரில் வைத்து விடுங்கள் அது நமக்கு நீண்ட நேரம் நின்று எரியும்.

Nah Ting Feng

அதேபோல், ஒரு சின்ன எவர்சில்வர் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்த கிண்ணத்தில் நிற்க வைத்து விடுங்கள் அதன் பின்பு அந்த கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி வையுங்கள் இப்படி செய்தால் ஏற்றிய மெழுகுவர்த்தி சீக்கிரமாக உருகாது நீண்ட நேரம் எரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com