உடற்பிரச்னைகளுக்கு ராஜ மருந்தாக விளங்கும் ‘ராஜ்மா!’

உடற்பிரச்னைகளுக்கு ராஜ மருந்தாக விளங்கும் ‘ராஜ்மா!’

சிவப்புக் காராமணி அல்லது ரெட் கிட்னி பீன்ஸ் என்று அழைக்கப்படும் ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து போன்ற அனைத்து சத்துக்களும் அதிக அளவில் அடங்கியுள்ளன. உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் அருமருந்தாக இந்த சிவப்புக் காராமணி விளங்குகிறது. அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புற்று நோய்: புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோய் செல்கள் உடலில் அதிகமாகாமல் தடுக்கலாம்.

கண்கள் ஆரோக்கியம்: ராஜ்மாவில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால், மாலைக்கண் நோய், கண் புரை நோய் ஆகியவற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

இதய ஆரோக்கியம்: ராஜ்மா தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி: ராஜ்மாவில் குறிப்பிடத்தக்க அளவு துத்தநாகம் உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

மூட்டு வலி: ராஜ்மாவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கின்றது.

சருமப் பாதுகாப்பு: ராஜ்மா சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்: ராஜ்மாவில் அதிக அளவில் உள்ள பொட்டாசியம் உடலின் ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், உடலில் சோடியத்தின் தாக்கத்தையும் குறைக்கிறது. இதனால் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறைகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியம்: கர்ப்பிணிப் பெண்கள் ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் எல்லாம் கிடைக்கின்றன. இதுதவிர, வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஃபோலிக் அமிலம் எனப்படும் சத்தும் இந்த ராஜ்மாவின் மூலம் கிடைக்கிறது.

பச்சை ராஜ்மாவில் ஹேமக்ளூட்டினின் (haemagglutinin) என்ற நச்சுப் பொருள் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே, ராஜ்மாவை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com