நீங்கள் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

Realize who you are!
Realize who you are!https://tamil.hindustantimes.com

ம்மில் பல பேர் நமக்குள் இருக்கும் பலத்தை உணருவதில்லை. மற்றவர்கள் நம்மை பற்றிச் சொல்லும் கருத்துகளை அப்படியே உண்மை என்று கருதி ஏற்றுக்கொள்கிறோம். யானையின் காலில் கட்டப்பட்ட சங்கிலி போல நாமும் மற்றவர்களின் கருத்து என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அதை உடைத்துக் கொண்டு எப்போது வர முடியும் என்றால், நம் பலத்தை முழுமையாக நாம் உணரும்போது மட்டுமேயாகும்!

ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். யாரேனும் நம்மிடம் ஒரு விஷயத்தை செய்ய முடியாது என்று கூறினால், அது அவர்கள் அந்த விஷயத்தைப் பற்றி வைத்திருக்கும் கருத்தாகும். அது அவருடைய வரைமுறையே! அவர்களின் கருத்து நமக்கு பொருந்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நமக்கான வறைமுறையை நாமே விதிக்க முடியும்.

‘தி ஹெல்ப்’ என்னும் ஆங்கிலப் படத்தில் ஒரு அருமையான காட்சி உண்டு. அதில் ஒரு பெண் குழந்தைக்கும் அந்தக் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலையாளுக்கும் உள்ள அழகான பந்தத்தைக் காட்டியிருப்பார்கள். அந்தப் படத்தில் வரும் ஒரு வசனம், ‘நீ அறிவாளி, நீ கருணையுடையவள், நீ முக்கியம்’ என்பதாகும்.

நாம் எல்லோருமே சதுரங்கம் விளையாடியிருப்போம். அதில் கருப்பு நிறத்திற்கு 16 காய்கள், வெள்ளை நிறத்திற்கு 16 காய்கள் இருக்கும். ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு வேலையிருக்கும். சிப்பாய்களுக்கு எதிரிகளை வெட்டுவது வேலை. ராணிக்கு ராஜாவை பாதுகாப்பது வேலை. ஆனால், ராஜாவிற்கு என்ன வேலை என்றால், பெரிதாக வேலை ஏதும் இல்லை, அதிகாரமும் இல்லை. ராஜாவால் ஒரு கட்டமே நகர முடியும். மொத்த சதுரங்க விளையாட்டிலும் ராணியே வலிமை மிகுந்தவராவார். ராஜா சும்மா இருப்பது போலதான் இருக்கும். அதற்காக ராஜாவை மட்டம் தட்டிவிட முடியுமா? ஏனெனில், ராஜாயில்லையேல் மொத்த விளையாட்டுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியென்றால் யார் வலிமை மிகுந்தவராவார்?

உங்கள் வாழ்க்கையிலும் நீங்களே ராஜா என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் முழு உரிமை உங்களுக்கே உள்ளது. யார் என்ன கூறினாலும் நீங்கள் உங்களுக்குள் சொல்ல வேண்டிய தாரக மந்திரம், ‘நான் அழகானவன், அறிவானவன், கருணை மிக்கவன், பலசாலி’ என்பதாகும். ஏனெனில், வாழ்க்கை என்னும் சதுரங்க விளையாட்டில் நீங்களே ராஜா ஆவீர்கள். நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com