கோடை காலத்தில் ஏசி என்பது நம்மை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் ஏசியை முறையாக பராமரிக்காதபோது அதில் நிரப்பப்பட்டிருக்கும் வாயு கசிவதால், அதன் செயல்திறன் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இந்த சிக்கலை பலர் எதிர்கொண்டிருக்கலாம். இந்த பதிவில் ஏசி கசிவுக்கான காரணங்களை தெரிந்துகொண்டு மற்றும் அதைத் தடுப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஏசி கேஸ் லீக் ஆவதற்கான காரணங்கள்:
ஏசி அமைப்பை முறையாக இன்ஸ்டால் செய்யாத போது கேஸ் கசிவு ஏற்படலாம். குறிப்பாக கூலன்ட் பகுதியில் இருந்து இன்டோர் யூனிட்டுக்கு கொடுக்கப்படும் இணைப்பில், ஏதேனும் பிரச்சனை இருந்தால் கேஸ் லீக்கேஜ் ஆகும். எனவே ஏசியை பொருத்துவதற்கு நல்ல அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநரை வர வைப்பது முக்கியம்.
ஏசி வாங்கி நீண்ட காலம் ஆனால், அதன் பைப் மற்றும் வால்வுகளில் அரிப்பு அல்லது சேதம் ஏற்பட்டு, கேஸ் லீக்கேஜ் ஆகலாம். எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம்.
ஏசி யூனிட்டில் தற்செயலாக ஏதேனும் சேதத்தை ஏற்படுத்தினாலும் ஏசி கேஸ் கசிவு ஏற்படலாம். ஏசி யூனிட்டை சுற்றி ஏதேனும் வேலை செய்யும்போது அதன் அருகில் எந்த பொருட்களையும் வைக்காமல், பாதுகாப்பாக வேலை செய்யுங்கள்.
ஏசியில் ஏதேனும் பிரச்சினை வரும்போது, தரம் குறைந்த பொருட்களை அதில் மாற்றினால் கூட கேஸ் லீக்கேஜ் பிரச்சனை வரலாம். எனவே உங்கள் ஏசிக்கு நல்ல தரமான உதிரி பாகங்களைப் பொருத்துங்கள்.
முறையாக உங்கள் ஏசியை நீங்கள் பராமரிக்க தவறினாலும், வாயுக்கசிவு உள்பட பல பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும். எனவே முறையாக ஏசியை சுத்தம் செய்து முறையாக பராமரிப்பது உறுதி செய்து கொள்ளுங்கள்.
தடுப்பு நடவடிக்கைகள்:
ஏசியை இன்ஸ்டால் செய்வதற்கு தொழில்முறை வல்லுனர்களின் துணையை நாடுங்கள். இவர்கள் அனைத்தையும் சரியாக பொருத்துவார்கள் என்பதால், ஏசி லீக்கேஜ் பிரச்சனை இருக்காது.
அவ்வப்போது ஏசியின் இன்டோர் மற்றும் அவுட்டோர் யூனிட்டை நீங்களாகவே பராமரிக்க வேண்டும். தூசி அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தால் முன்கூட்டியே கண்டறிந்து அதை உடனடியாக சரி செய்யுங்கள்.
ஏசியில் தேவையில்லாத சத்தம் அல்லது துர்நாற்றம், அல்லது வாயுகசிவுக்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக ஏசி மெக்கானிக்கை அழைத்து சரிபார்க்கவும்.
வாங்கும்போதே நல்ல தரமான ஏசி பிராண்டாக பார்த்து வாங்கவும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு பிராண்டை தேர்வு செய்தால், எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஏசி கசிவுக்கான காரணங்களைப் புரிந்துகொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது மூலம், உங்கள் ஏசி சிஸ்டத்தின் செயல்திறனையும் ஆயுளையும் நீங்கள் பராமரிக்கலாம். வழக்கமாக அவ்வப்போது ஏசியை பராமரித்து வந்தாலே, எவ்விதமான தொந்தரவையும் நீங்கள் சந்திக்க மாட்டீர்கள்.