சாதாரண பிரஷ் Vs. எலக்ட்ரிக் பிரஷ்: எது சிறந்தது? 

Regular Brush Vs. Electric Brush
Regular Brush Vs. Electric Brush
Published on

பற்களை சுத்தம் செய்வது என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமான பகுதி. பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் நமது முகம் அழகாகவும், நம்பிக்கையுடன் பேசவும் முடியும். பற்களை சுத்தம் செய்ய பல வகையான பிரஷ்கள் உள்ளன. அவற்றில் சாதாரண பிரஷ் மற்றும் எலக்ட்ரிக் பிரஷ் ஆகியவை மிகவும் பிரபலமானவை. இந்த இரண்டு பிரஷ்களில் எது சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்வது நமது பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

சாதாரண பிரஷ்: சாதாரண பிரஷ் என்பது நாம் அனைவரும் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு வகை பிரஷ். இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. சாதாரண பிரஷ் மூலம் பற்களை சுத்தம் செய்ய, நாம் அதை பற்களின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மெதுவாக நகர்த்தி தேய்க்க வேண்டும். 

  • சாதாரண பிரஷின் நன்மைகள: சாதாரண பிரஷ்கள் மிகவும் மலிவானவை. இந்த பிரஷ்களை எங்கும் எளிதாக வாங்கிக் கொள்ளலாம். மேலும் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. 

  • சாதாரண பிரஷின் தீமைகள்: சாதாரண பிரஷை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பற்களின் எனாமல் அரிப்பு ஏற்படலாம். இந்த பிரஷ் மூலமாக அனைத்து பகுதிகளையும் சரியாக சுத்தம் செய்ய முடியாது. சாதாரண பிரஷ் மூலம் பல் துலக்குவது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்.

எலக்ட்ரிக் பிரஷ்: 

எலக்ட்ரிக் பிரஷ் என்பது மின்சார சக்தியைப் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யும் ஒரு வகை பிரஷ். இது பல் துலக்கப் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமாகும். எலக்ட்ரிக் பிரஷ் பல் துலக்குவதில் பல நன்மைகளை வழங்குகிறது.

  • எலக்ட்ரிக் பிரஷின் நன்மைகள்: எலக்ட்ரிக் பிரஷ் பற்களை மிகவும் திறமையாக சுத்தம் செய்கிறது. இந்த பிரஷ் பற்களின் அனைத்து பகுதிகளையும் சரியாக சுத்தம் செய்கிறது. பொதுவாகவே எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்துவது அனைவருக்கும் பிடிக்கும் என்பதால், எலக்ட்ரிக் பிரஷ் பல் துலக்குவதில் ஆர்வத்தை அதிகரிக்கிறது. மேலும், இந்த பிரஷ்ஷில் பல் துலக்கினால் நேரமும் குறைகிறது. 

  • எலக்ட்ரிக் பிரஷின் தீமைகள்: எலக்ட்ரிக் பிரஷ்கள் விலை அதிகம். இந்த பிரஷ்களைப் பயன்படுத்த முதலில் ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். மின்சாரம் இருந்தால் மட்டுமே இந்த பிரஷ்ஷை பயன்படுத்த முடியும். 

இதையும் படியுங்கள்:
உடலுக்கு நார் மற்றும் பிரஷ் போட்டு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தெரியுமா?
Regular Brush Vs. Electric Brush

சாதாரண பிரஷ் vs. எலக்ட்ரிக் பிரஷ்: எது சிறந்தது?

சாதாரண பிரஷ் மற்றும் எலக்ட்ரிக் பிரஷ் இரண்டிற்கும் அவற்றிற்கென நன்மை, தீமைகள் உள்ளன. எது சிறந்தது என்பது நம்முடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் வசதிகளைப் பொறுத்து மாறுபடும்.

  • நீங்கள் மலிவான மற்றும் எளிதாக கிடைக்கும் ஒரு பிரஷ் தேடுபவராக இருந்தால் சாதாரண பிரஷ் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

  • நீங்கள் பற்களை மிகவும் திறமையாக சுத்தம் செய்ய விரும்பினால்: எலக்ட்ரிக் பிரஷ் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

  • நீங்கள் பல் துலக்குவதில் ஆர்வம் இல்லாதவராக இருந்தால்: எலக்ட்ரிக் பிரஷ் பயன்படுத்துவது நல்லது.

சாதாரண பிரஷ் மற்றும் எலக்ட்ரிக் பிரஷ் இரண்டையும் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யலாம். எது சிறந்தது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com