Spider mite
Spider mite

மீண்டும் மீண்டும் சிலந்தி பூச்சிகளின் தொல்லையா?

காலை எழுந்தவுடன் ஜன்னல் கம்பியில் அல்லது வீட்டின் மூலையில் காணப்படும் தூசு வலையால் ஒரு வகையான எரிச்சலை உணர்வோம். “என்ன இது! நான்கு நாட்கள் முன்னர் தான் இதை சுத்தம் செய்தோம்; இப்போ மறுபடியும் செய்யவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதே!” என்று தோன்றும். இது எப்படி வருகிறது? எப்படி தடுக்கலாம்? இப்போது பார்க்கலாம்;

1. ஒரு தொழில்முறை பூச்சிக் கட்டுப்பாட்டாளரை அணுகலாம்:

  • சிலந்தி வலைகள் இருப்பதை பார்க்கலாம். ஆனால் சில நேரங்களில் வலையிருந்தும் சிலந்தியை காண முடியாது, அப்போது ஒரு தொழில்முறை பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களை அணுகினால். அவர்கள் உங்கள் வீட்டிலிருந்து சிலந்திகளை அகற்றி மற்றும் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பொருத்தமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவார்கள்.

2. வழக்கமான சுத்தம்:

  • சிலந்திகள் மற்றும் அவற்றின் இரையை ஈர்க்கக்கூடிய குப்பைகள் மற்றும் உணவு ஆதாரங்களை அகற்றி கொள்ளுங்கள். அவ்வப்போது சுத்தம் செய்யும் வேலையை மறக்காமல் முடித்துவிடுங்கள்.

3. முதலில் நுழைவை தடுங்கள்:

  • சிலந்திகள் மற்றும் பிற பூச்சிகள் வீட்டினுள் நுழையாமல் இருக்க, இறுக்கமான ஜன்னல் திரைகள் மற்றும் கதவுகளை நிறுவலாம்.

  • கதவுகள், ஜன்னல்கள் அடிக்கடி பயன்பாட்டில் இருக்கும் போது ஏதோ ஒரு நேரத்தில் அவைகளை சுற்றி ஏதேனும் இடைவெளிகள் அல்லது விரிசல்கள் உண்டாகும். எனவே அதை முடிந்தவரை கண்காணித்து அடைத்துவிட வேண்டும். அப்போது தான் சிலந்திகள் நுழைவதைத் தடுக்க முடியும்.

4. வெளிப்புற பராமரிப்பு:

  • வெளிப்புற குப்பைத் தொட்டிகள் மற்றும் மறுசுழற்சி தொட்டிகளை ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அப்பால் தூரத்தில் வைத்து உபயோகிக்கவேண்டும் .

  • குளிர் அதிகமான நேரங்களில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சாப்பிடும்போது பேசக்கூடாது! ஏன் தெரியுமா?
Spider mite

5. இயற்கை விரட்டிகள்:

  • ஜன்னல் ஓரங்கள், கப்போர்டுகள் மற்றும் வெளிப்புற கதவுகளுக்கு அருகில் chestnuts களை வைக்கவும். Chestnut சிலந்திகளை விரட்டும் என்று சிலர் நம்புகிறார்கள்.

  • புதினா எண்ணெய்: சிலந்திகளுக்கு புதினா எண்ணெயின் வாசனை பிடிக்காது. சில துளிகள் புதினா எண்ணெயை தண்ணீரில் கலந்து, ஜன்னல்கள், கதவுகள் மற்றும் பிற நுழைவுப் வாயில்களை சுற்றி தெளிக்கவும்.

  • சிட்ரஸ் தோல்கள்: சிட்ரஸ் பழத்தோல்களை (ஆரஞ்சு, எலுமிச்சை ) கப்போர்டுகள் மற்றும் ஜன்னல் ஓரங்களில் தேய்க்கவும். இதன் வலுவான வாசனை சிலந்திகளை வரவிடாமல் தடுக்கும் .

  • பெட்ரோலியம் ஜெல்லி: பெட்ரோலியம் ஜெல்லியை லேசாக ஜன்னல் பிரேம்கள் மற்றும் கதவு வாசலில் தடவவும். சிலந்திகள் மேற்பரப்பில் ஊர்ந்து செல்வதை இது தடுக்கும்.

  • விளக்குகளை அணைத்து வைக்கவும்: பூச்சிகள் ஒளியினால் ஈர்க்கப்படுகின்றன. இது சிலந்திகளுக்கும் பொருந்தும். எனவே இரவில் தேவையில்லாத நேரங்களில் வெளிப்புற விளக்குகளை அணைத்து வைக்கலாம் அல்லது பூச்சிகளை ஈர்க்காத மஞ்சள் அல்லது சோடியம் நீராவி பல்புகளைப் பயன்படுத்தலாம்.

  • லாவெண்டர் வாசனை நிரப்பிய பைகள்: உலர்ந்த லாவெண்டர் நிரப்பப்பட்ட பைகளை அலமாரிகள், இழுப்பறைகள் மற்றும் பிற சேமிப்புப் பகுதிகளில் வைக்கவும். லாவெண்டர் ஒரு இனிமையான நறுமணத்தைக் கொண்டுள்ளதால் சிலந்திகள் வருவதை தடுக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com