ரோஜாப்பூவும் முற்செடியும்!

Rose plant thorn plant
Rose plant thorn planthttps://thirukkuralpakkam.blogspot.com
Published on

விவசாயி ஒருவர் அவர் தோட்டத்தில் ரோஜா செடியையும், முற்செடியையும் வளர்த்து வந்தார். தினமும் ரோஜாவிற்கும், முற்செடிக்கும் தண்ணீர் விட்டு, உரம் போட்டு கண்ணும் கருத்துமாகவே பார்த்துக்கொள்வார். இரண்டு செடிகளையுமே ஒரே மாதிரியே கவனித்துக்கொண்டார்.

இருப்பினும் ரோஜா செடியில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. ஆனால், முற்செடியில் வெறும் முற்களே இருந்தன. இரண்டு செடிகளையும் ஒரே மாதிரி பார்த்துக்கொண்ட பிறகும் ஏன் இப்படி ஒரு வித்தியாசம் என்று எண்ணினார். எனினும் அவருக்கு தாமதமாகவே புரிந்தது. ரோஜா செடியின் குணம் ரோஜா மலர்களைத் தருவது. முற்செடியின் குணம் முற்களை தருவது. அது அவற்றின் குணமே! அதை நம்மால் மாற்ற இயலாது. என்னதான் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு பார்த்துக்கொண்டாலும் முற்செடி ரோஜாவை தரப்போவதில்லை.

அப்படித்தான் நம் வாழ்க்கையிலும் சில பேர் இருக்கிறார்கள். நாம் எவ்வளவு கனிவாக இருந்தாலும், எவ்வளவு அன்பை பொழிந்தாலும் அதை உதாசினப்படுத்துவார்கள். அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், அது அவர்களுடைய குணம். எனவே, எல்லோருக்கும் பொதுவாக உங்கள் அன்பை கொடுப்பதை நிறுத்திவிட்டு ரோஜா செடி யார் என்று பார்த்து அன்பைக் கொடுங்கள்.

நம் வாழ்க்கையில் புதிதாக மனிதர்களை சந்திக்கும்போது, அவர்கள் ரோஜா செடியா? இல்லை முற்செடியா? என்பதை கவனியுங்கள். அதனால் அவர்களிடமிருந்து எந்த அளவு எதிர்ப்பார்ப்பு வைத்துக்கொள்ளலாம் என்பதை கணித்துவிடலாம்.

சிலர் கோபக்காரர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கோபமான சமயங்களில், கனிவான, அமைதியான, ஆறுதல்களை எதிர்ப்பார்க்காதீர்கள். சிலர் சுயநலவாதிகளாக இருப்பார்கள், அவர்களிடம் எந்த எதிர்ப்பார்ப்பும் வைக்காதீர்கள். அது உங்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். யார் யார் எப்படியோ அப்படியே அவர்களிடமும் நடந்துக்கொள்ளுங்கள். அவர்கள் கொடுப்பதையே அவர்களுக்கும் திருப்பிக்கொடுங்கள்.

இதையும் படியுங்கள்:
கை, கால்கள் மரத்துப்போவதன் காரணம் தெரியுமா?
Rose plant thorn plant

‘ஏன் நம்மிடம் அவர்கள் பேசவில்லை? ஏன் அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள்? போன்ற கேள்விகளை நமக்குள் நாம் கேட்டுக்கொள்ளத் தேவையில்லை. நாம் கொடுக்கும் அன்பையோ, பாசத்தையோ அடுத்தவர்களும் நமக்குத் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற பிரதிபலனை எதிர்ப்பார்க்காமல் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், ரோஜா செடி குணமுள்ளவர்களும், முற்செடியின் குணம் உள்ளவர்களும் இங்கு நிறைய பேர் உண்டு.

எனவே, அவர்களின் குணத்திற்கு ஏற்றார்போல் அவர்களை நடத்த கற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் ஏமாற்றம் குறைந்து மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com