திருமண அழைப்பிதழ்களில் உள்ள RSVP-க்கு இதுதான் அர்த்தமா?

RSVP meaning in wedding card.
RSVP meaning in wedding card.

சில திருமண அழைப்பிதழ்களில் RSVP என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகவே எல்லா நிகழ்வுக்கான Invitation-களிலும் இந்த சொல் பொதுவானதுதான் என்றாலும், இதன் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த பதிவில் RSVP-யின் உண்மையான அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

RSVP என்றால் என்ன?

RSVP என்பது "Répondez s'il vous plaît" என்பதைக் குறிக்கும் பிரெஞ்சு சொற்றொடர். இதற்கு ஆங்கிலத்தில் ‘தயவு செய்து பதிலளிக்கவும்’ என்று பொருள். அதாவது குறிப்பிட்ட நிகழ்வுக்காக அழைக்கப்படும் நபர், கலந்து கொள்வாரா? இல்லையா? என்பதைத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, கண்ணியமான கோரிக்கை வார்த்தையாக இது செயல்படுகிறது. இதன் மூலமாக நிகழ்வைத் திட்டமிடுபவர்கள் தங்கள் நாளை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்துவதில் RSVP முக்கிய பங்கு வகிக்கிறது. 

திருமண அழைப்பிதழ்களில் RSVP-யின் முக்கியத்துவம்:

தம்பதிகள் அவர்களின் திருமண அழைப்பிதழில் RSVP கோரிக்கையை சேர்ப்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, அதில் பங்கேற்பவர்களின் துண்ணியமான எண்ணிக்கையை தெரிந்து கொள்வதாகும். இதைத் தெரிந்து கொள்வது மூலமாக பங்கேற்பாளர்களுக்கு போதுமான இருக்கைகள் மற்றும் உணவுகள் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

திருமணம் போன்ற நிகழ்வுகளில் செலவு அதிகம் இருக்கும் என்பதால், பட்ஜெட்டை நிர்வகிக்க, அதில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. எனவே RSVP கோரிக்கை விடுப்பது மூலமாக, திருமண ஏற்பாடுகள் தொடர்புடைய செலவுகளை முன்கூட்டியே துல்லியமாக மதிப்பிட முடியும். இதன் மூலமாக தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருமண உறவில் இவ்வளவு தவறுகள் நடக்கிறதா?
RSVP meaning in wedding card.

ஒரு திருமணத்தை திட்டமிடுவது என்பது இடத்தை தேர்வு செய்தல், போக்குவரத்து ஏற்பாடு போன்ற விவரங்களை உள்ளடக்கியது. RSVP மூலமாக விருந்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ற இடம் சார்ந்த முடிவுகளை சரியாக எடுக்க முடியும். இதனால் கடைசி நிமிடத்தில் குழப்பம் மற்றும் பற்றாக்குறையை தவிர்த்து, சரியான முறையில் விருந்தினர்களுக்கு அனைத்தையும் உறுதி செய்யலாம். 

எனவே இனி நீங்கள் ஏதாவது அழைப்பிதழில் RSVP என்ற வார்த்தை போடப்பட்டிருப்பதை கவனித்தால், உடனடியாக அவர்களுக்கு வருவீர்களா? இல்லையா? என பதிலளிப்பது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com