கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி படுக்க வேண்டும்?

கர்ப்பிணி பெண்
கர்ப்பிணி பெண்Intel

பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பகுதி என்றால் அது அவரது பிரசவ காலம் தான். முந்தைய காலங்களில் பெண்கள் கர்ப்பமாக இருந்தாலும் அந்த வேலை, இந்த வேலை என அனைத்தையும் செய்வார்கள். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. கொஞ்சம் வேலை செய்தாலும் கூட குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது அல்லது கரு கலைந்து விடுகிறது. அந்த அளவிற்கு பெண்கள் தற்போது பலவீனமாக உள்ளனர். அதற்கு காரணம் தற்போது உள்ள உணவு பழக்கங்கள் தான்.

இதிலும் சில பெண்கள் தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்றே தெரியவில்லை. குறிப்பாக வயிற்றில் குழந்தை இருக்கும் போது எப்படி தூங்க வேண்டும் என்பது பற்றி தெரியவில்லை. இது குறித்து தற்போது பார்க்கலாம்.

முதல் 3 மாதங்கள் ஒரு கர்ப்பிணி பெண் தனக்கு வசதியாக இருக்கும் வகையில் தூங்கலாம். இருப்பினும் 2வது, 3வது மாதங்களை எட்டும் போது தூங்கும் நிலைகளில் சற்று கவனம் தேவை. மருத்துவர்களின் கூற்றுப்படி கர்ப்ப காலத்தில் பக்கவாட்டில் தூங்குவது சிறந்த தூக்க நிலையாகும். ஏனெனில் இது கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

4 மாதங்கள் தொடங்கிய பின்னர் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் என்பதால் முன்பு போல் இயல்பாக படுக்க முடியாது. குறிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த 4 - மாதம் தான் இரண்டாம் ட்ரைமெஸ்டர் எனப்படுகிறது.

4வது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும். இதனால் மல்லாந்து படுப்பது கூடாது.

3ஆம் ட்ரைமஸ்டர் எனப்படும் 7 முதல் 9 ஆம் மாதம் அலட்சியமாக படுத்தால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வலது பக்கம் உறங்குவது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அப்படி தூங்க கூடாது.

குழந்தை வளரும் போது கருப்பை விரிவடைகிறது. இது வயிறு மற்றும் முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் சரியான நிலையில் தூங்கினால் தான் இந்த அசௌகரியத்தை தவிர்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com