கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இத்தனை நன்மைகளா?

So many benefits of joint family?
So many benefits of joint family?https://tamil.lifeberrys.com
Published on

ந்தக் காலங்களில் கூட்டுக் கூடும்பம் என்பதையே தேடித்தான் கண்டுபிடிக்க உள்ளது. முன்பெல்லாம் பெற்றோர்கள் திருமணம் நடக்கும் முன்பு மணப்பெண்ணிடம், ‘திருமணத்துக்குப் பிறகு ஒற்றுமையாக இருக்க வேண்டும், கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும், இப்படி இருந்தால்தான் உனக்கு நல்லது’ என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள். ஆனால், இப்பொழுது அப்படி அல்ல… பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு போடும் முதல் கண்டிஷனே திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனம் வர வேண்டும் என்பதுதான்.

தனிக் குடித்தனமாக இருந்தால்தான் நல்லது என ஒரு தவறான கண்ணோட்டத்தை பெற்றோர்கள் வளர்த்ததும் இன்றைய தலைமுறையினர் அதைப் புரிந்து கொண்டதும்தான் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு அற்புதமான குருவிக்கூடு கலைவதற்கான காரணம். இந்தக் கூட்டுக் குடும்பத்தின் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சந்தோஷம்: கூட்டுக் குடும்பங்களில் அவ்வளவு சந்தோஷம் நிரம்பி உள்ளது. உங்களது சந்தோஷம் மட்டுமின்றி, இதில் மற்றவர்களது சந்தோஷத்தைக் கூட பகிர்ந்துக் கொள்ள முடியும். அதேபோல உங்களது சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளும்போதும் அது பன்மடங்காக அதிகரிக்கும்.

பொருளாதாரம்: கூட்டுக் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நிறைய நன்மைகள் இருக்கின்றன. பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம், பொழுதுபோக்கு செலவுகள், வாடகை என அனைத்திலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

வேலைபளு குறைவு: குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது வேலை பளு குறைவாக இருக்கும். வீட்டு வேலைகளில் இருந்து, வெளி வேலைகள் வரை அனைத்திலும் சுமை குறைவாக இருக்கும். உதாரணமாக சமையல் செய்வது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது என அனைத்திலும் உதவுக்கு ஆட்கள் இருப்பார்கள்.

நல்லொழுக்கங்கள்: கூட்டுக் குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு மத்தியில் நல்லொழுக்கம் நிறைய இருக்கும். வாழ்வியல் முறை, பந்தம், பற்று, உதவி செய்தல், ஊக்கம் அளிப்பது, பரந்த மனப்பான்மை என பல வகைகளில் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஓ! அடிக்கடி கண் துடிப்பதற்கு இதுதான் காரணமா?
So many benefits of joint family?

ஓய்வு நேரம்: பெண்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் மூலமாக, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மற்றொருவர் உதவி செய்வார். எனவே, கூட்டுக் குடும்பத்தில் நல்ல ஓய்வு எடுக்க முடியும்.

குறைந்த செலவு: எங்கு செல்வதானாலும், எது செய்வதானாலும் ஏற்படும் செலவு குறைவாக இருக்கும். உதாரணமாக, பிக்னிக் செல்வதாக இருக்கட்டும், வெளியூர் செல்வதாக இருக்கட்டும், பண்டிகைகள் கொண்டாடுவதாக இருக்கட்டும், அனைவரும் சேர்ந்து செலவு செய்யும்போது செலவு குறைவாக ஏற்படும்.

கூட்டுக் குடும்பத்தில் இத்தனை நன்மைகள் இருக்க, நாம் தனித்தனியாய் பிரிந்து தனி மரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனி வரும் நமது சந்ததிகளுக்காவது கூட்டுக் குடும்பத்தின் அருமையை உணர்த்த வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com