அடேங்கப்பா! திறந்த மனதோடு இருப்பதில் இத்தனை நன்மையா?

So much for being open minded?
So much for being open minded?https://www.wikihow.com

பொதுவாக, மனிதர்கள் பல வகைப்படுவார்கள். வெகுளித்தனம் நிறைந்தவர்கள், திறந்த மனதுடன் (Open Mindedness) வெளிப்படையாகப் பேசுபவர்கள், கடுகடுவென்று இருப்பவர்கள், அமைதியான சுபாவம் உள்ளவர்கள், அழுத்தக்காரர்கள் என்று பல ரகத்தில் உள்ளனர். ‘கிளோஸ்டு மைண்ட்’ என சொல்லப்படுபவர்கள் யார் எதைச் சொன்னாலும் அதை கேட்டுக்கொள்ளவே மாட்டார்கள். 'எனக்கு எல்லாம் தெரியும். பிறர் எனக்கு உபதேசம் செய்ய அவசியம் இல்லை' என்று சொல்வார்கள். அவர்களுக்கு நேர் எதிரிடையானவர்கள் திறந்த மனதுடையவர்கள். இவர்கள் பொதுவாக எல்லோராலும் விரும்பப்படுபவராக இருப்பார்கள். திறந்த மனதிற்கு சொந்தக்காரர்களின் 9 விசேஷமான குணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. எளிதில் கற்றல்: திறந்த மனதுடன் இருப்பவர்களால் மிக எளிதாக புதிய விஷயங்களையும் புதிய தகவல்களையும் யோசனையையும் உள்வாங்கிக்கொள்ள முடியும். அது அவர்களது புத்திசாலித்தனத்தை உயர்த்தி அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கிறது.

2. உறவு மேலாண்மை: இவர்களால் பிறரது மனப்பாங்கை புரிந்துகொள்ள முடியும். அவர்களது நிலையில் தங்களை நிறுத்தி அவர்கள் மேல் பச்சாதாபம், கருணை, அன்பு போன்றவற்றை செலுத்தி அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆறுதலும் சொல்வார்கள். இவர்களுக்கு நன்றாக உறவு மேலாண்மையை கடைப்பிடிக்க தெரியும். அதனால் நிறைய நண்பர்களும் உறவினர்களும் இவர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள்.

3. வளைந்து கொடுக்கும் தன்மை: இவர்கள் நெகிழ்வான மனதிற்கு சொந்தக்காரர்கள். மிக எளிதாக புதிய சூழ்நிலைகளில் தங்களை திறம்பட பொருத்திக்கொள்ளும் இயல்புடையவர்கள். நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மையினால் இவர்கள் பிறரை எளிதில் வசிகரித்து விடுவார்கள்.

4. இணக்கமான மனிதர்கள்: இவர்களுடைய திறந்த மனப்பான்மை பிறருடன் நல்ல புரிதலை ஊக்குவிக்கிறது. மோதல்கள் மற்றும் தவறான புரிதல்களை தவிர்க்கிறது. எந்த மனிதரும் இவர்களுடன் பிணக்கு வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு இவர்கள் இணக்கமாக இருப்பார்கள்.

5. சிக்கல்களை தீர்ப்பார்கள்: இவர்களால் நன்றாக சிந்தித்து செயல்பட முடியும். தனக்கு ஏதாவது பிரச்னை என்றாலும் பிறருக்கு ஏதாவது சிக்கல் என்றாலும் சரியான தீர்வுகளை சொல்வார்கள். தங்களுடைய பரந்த அறிவிலான தீர்வுகளை கருத்தில் கொண்டு நல்ல சுமூகமான முடிவுகளைத் தருவார்கள்.

6. தனிப்பட்ட வளர்ச்சி: தங்களுடைய திறந்த மனப்பான்மை மற்றும் சிறந்த அணுகுமுறையால் இவர்கள் தனிப்பட்ட வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவார்கள். தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நன்றாக முன்னேற்றுவார்கள்.

இதையும் படியுங்கள்:
தேர் இழுப்பதினால் என்ன பலன்? காஞ்சி மகா பெரியவர் கருத்து!
So much for being open minded?

7. பின்னடைவிலிருந்து எளிதாக மீள்வார்கள்: தங்கள் செயல்களில் ஏதேனும் பின்னடைவோ அல்லது தோல்வியோ ஏற்பட்டால் அவற்றை எளிதாக சரி செய்து விடுவார்கள். திறந்த மனப்பான்மையுடன் இருப்பதால் பிறர் கூறும் நல்ல அறிவுரைகளை கருத்தில் கொண்டு இவர்கள் சிக்கல்களை தீர்த்து விடுவார்கள்.

8. உலகளாவிய கண்ணோட்டம்: இவர்களது திறந்த மனப்பான்மை பல்வேறு கலாசாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களை பாராட்டவும் உலகளாவிய விழிப்புணர்வை வளர்க்கவும் உதவுகிறது.

9. மகிழ்ச்சியான மனிதர்கள்: திறந்த மனப்பான்மையுடன் திகழ்வது இவர்களுக்கு நிறைவான மற்றும் வளமான வாழ்க்கை அனுபவத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் எப்போதும் மகிழ்ச்சியான மனதிற்கு சொந்தக்காரர்களாகவும் மலர்ச்சியான முகத்தை உடையவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com