சம்மர் விடுமுறையில் குழந்தைகளை சமாளிக்க சில யோசனைகள்!

Some ideas to cope with the kids during the summer holidays
Some ideas to cope with the kids during the summer holidays

ங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சம்மர் ஹாலிடே விட்டாச்சு. வீட்டில் ஒரே ரகளைதான். ஒரு கட்டத்தில் குழந்தைகளின் லூட்டி நமக்கு சலிப்பைக் கூட ஏற்படுத்தலாம். இதனால் அவர்கள் மீது தேவையில்லாத வெறுப்பு ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்கவும், உங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலிகளாக மாறுவதற்கும் இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற சில யோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நர்சரியைப் பார்வையிட அழைத்து செல்லலாம்: உங்கள் குழந்தைகளுக்கு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்க விரும்பினால், அவர்களை அருகில் உள்ள நர்சரிக்கு அழைத்துச் சென்று பல்வேறு வகையான செடிகள் மற்றும் பூக்களை பற்றி கூறலாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைக்க சில பூ செடிகளையும் வாங்கிச் செல்லலாம். மேலும், உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல உங்கள் நகரத்தில் ஏதேனும் மலர் கண்காட்சி நடைபெறுகிறதா என்று அறிந்து, அவர்களை அங்கு அழைத்துச் செல்லுங்கள்.

வாசிப்பு திறனை மேம்படுத்தலாம்: புத்தகம் வாசிப்பது மனநலத்தை அதிகரிக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தலாம். ஆனால், பாடப்புத்தகங்களை வாசிக்கக் கூற வேண்டாம். ஏனென்றால், ‘என்னடா லீவுல கூட நாம் படிக்கணுமா?’ என நினைத்துவிடுவார்கள். ஆதலால், கதை புத்தகங்கள், விடுகதை போன்ற புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கலாம். இல்லையெனில், உங்கள் குழந்தை படிக்க விரும்பும் புத்தகங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

செல்லப்பிராணி வளர்ப்பு: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயல்பாடுகளில் ஒன்று செல்லப்பிராணி வளர்ப்பு. இது உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்காக இருக்கும். இது, உங்கள் குழந்தை மிகவும் பொறுப்புள்ளவராகவும், பொறுமையாகவும், இரக்கமுள்ளவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாற்றும். செல்லப்பிராணிக்கு நகங்களை வெட்டுதல், உணவளித்தல், வாக்கிங் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளைச் செய்யச் சொல்லுங்கள்.

கழிவுகளை மறுசுழற்சி செய்ய கற்றுக்கொடுப்பது: தேவையற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்வது, சுற்றுச்சூழல் நட்பு நடைமுறையாகக் கருதப்படுகிறது. காகிதம், அட்டை, பிளாஸ்டிக், ஸ்டீல் கேன்கள் போன்ற கழிவுப்பொருட்களை புதியதாக மாற்ற உதவுகிறது. நீண்ட நாளான தகர டப்பாக்களை பெயிண்ட் செய்து அதில் செடி வைக்க கற்றுக்கொடுக்கலாம். வீட்டிலேயே மறுசுழற்சி செய்வதன் மூலம் உங்கள் பிள்ளையை ஒரு பொழுதுபோக்காக மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கலாம்.

பாட்டு பாடுதல்: பாடுவது ஒரு ஆர்வம் மற்றும் திறன் சார்ந்த பொழுதுபோக்காகும். இது மனதை தளர்த்த உதவுகிறது மற்றும் மேம்பட்ட சுவாசம் மற்றும் இதய செயல்பாடு போன்ற பல உடலியல் நன்மைகளை வழங்குகிறது. ஒரு பாட்டு வகுப்பில் சேர்வது உங்கள் குழந்தையின் திறமையை அதிகரிக்க உதவுவதோடு, அவர்களின் பாடும் திறனை மேம்படுத்தவும் உதவும்.

Tamilmalar Natarajan

நடனம் கற்கலாம்: நடனம் மிகவும் பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான ஒன்று. இது மனதை நிதானப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் குழந்தை நடனமாட ஆர்வமாக இருந்தால், அவர்களை ஒரு நடன வகுப்பில் சேர்ப்பது நல்லது. ஒரு தொழில்முறை உதவியாளரிடமிருந்து நடனத்தைக் கற்றுக்கொள்வது, நடனத் திறன்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு உதவும்.

சமைக்கக் கற்பித்தல்: சமைப்பது நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. ஏனென்றால், சமைப்பது மிகவும் மகிழ்ச்சியான திறமையாகும். அதனால்தான் அனைவரையும் சமையல் எளிமையாக ஈர்க்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு சமைப்பதில் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு சமைக்க கற்றுக்கொடுக்கலாம். இல்லையெனில், உங்களுக்கு உதவ கூறலாம். அவர்களை எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள். பொறுமை முக்கியம். தீயில்லாமல் சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

தைப்பது அல்லது பின்னல்: கை அல்லது இயந்திரம் மூலம் நூல் அல்லது துணி வைத்து கைவினை பொருட்களை தயாரிக்கக் கற்றுக்கொடுக்கலாம். இதனால், கைவினைப்பொருளின் மீதான அவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். பின்னல் வகுப்புகள் லேஸ்கள் போன்ற மென்மையான பின்னல் பொருட்களை உருவாக்க சிக்கலான பின்னல் முறைகளைக் கற்றுக்கொள்ள உதவும். இல்லையெனில், சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பலாம்.

இதையும் படியுங்கள்:
ஃபென்னல் டீயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Some ideas to cope with the kids during the summer holidays

நாணயங்களை சேகரித்தல்: தற்போதையை குழந்தைகள் பலரின் ஆர்வமாக காயின் சேகரிப்பு இருந்து வருகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், கல்வி சம்பந்தமான பொழுதுபோக்காகவும் இருக்கும். நாணயங்களை சேகரிப்பது, அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கிறது. தனித்துவமான மற்றும் அரிய நாணயங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் இந்த பொழுதுபோக்கில் நீங்களும் ஈடுபடலாம்.

புகைப்படம் எடுத்தல்: போட்டோகிராஃபி தற்போது அனைவருக்கும் பிடித்த பொழுதுபோக்காக இருக்கும். ஏனென்றால், தொலைபேசி வைத்திருக்கும் அனைவரும் புகைப்படக்கலைஞர்களாக மாறிவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது கேமரா, வழிகாட்டுதல் மற்றும் நல்ல படங்களை எடுப்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குங்கள். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள், படங்களைக் கிளிக் செய்து ஜாலியாக இருங்கள்.

மேற்கண்டவற்றைப் படித்தவுடன், ‘அப்பாடா ஒரு தெளிவு கிடைத்தது என்ற நிம்மதி உங்கள் மனதில் இருக்குமே... நீங்கள் படித்ததில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டை இந்த சம்மர் விடுமுறையில் கற்றுக் கொடுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com