
டிவி, பிரிட்ஜ், டியூப் லைட் போன்றவற்றை உபயோகத்திற்கு பின் அணைத்துவிட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. டிவியில் பிக்சர் டியூபும், பிரிட்ஜில் கம்ப்ரஸரும் பழுதாகிவிடும் நிறுத்திய பின் சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் போடலாம்.
மின்சாரத்தினால் சட்டென்று ஏற்பட்ட தீயை தண்ணீரைக்கொண்டு அணைக்க முயற்சிக்கக்கூடாது.
பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற மின் சதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று மின் பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும்.
டி.வி திரையை சுத்தம் செய்ய ஸ்பிரேயை பயன்படுத்தும்போது அதை நேரடியாக ஸ்கிரீனில் பயன்படுத்தாமல் மென்மையான துணியில் ஸ்பிரே செய்து அந்த துணியைக்கொண்டு திரையை மெதுவாக துடைத்து சுத்தம் செய்யலாம்.
LCD,OLED, பிளாஸ்மா போன்ற டிவி திரையை சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்துவது நல்லது. இது டிவி திரையை சேதப்படுத்தாமலும், கைரேகைகள் மற்றும் தூசி, அழுக்கை சுத்தம் செய்யவும் இந்த துணிகள் ஏற்றது.
டிவி திரையை சுத்தம் செய்து முடித்தவுடன் உடனடியாக திரையை ஆன் செய்யாமல் சிறிது நேரம் காயவிட்டு பின் ஆன் செய்யவும்.
ஏசி பயன்பாட்டில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற ஸ்டெபிலைசரை பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். பல நாட்களாக செயல்படாமல் இருந்த ஏசியை முறையாக சர்வீஸ் செய்துவிட்டே பயன்படுத்த வேண்டும். சர்வீஸ் செய்யாமல் இயக்கக் கூடாது.
குளிர்சாதன பெட்டியை சுவர்களுக்கு மிக அருகில் வைப்பதை தவிர்க்கவும். திறமையான குளிரூட்டலுக்கு எப்பொழுதும் சரியான வெப்பநிலையை கையேட்டை பின்பற்றி அமைக்கவும். குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறமும், உள்புறமும், கதவின் கேஸ்கெட்டையும் மென்மையான ஈரத்துணி கொண்டு சுத்தப்படுத்துவது நல்லது.
தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் இன்றைய உலகில் மின்னணு பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். அத்துடன் இணைய அச்சுறுத்தல்கள் அதிநவீனமாகி வருகின்றன. எலக்ட்ரானிக் பொருட்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலுவான அணுகல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தவும். குறியாக்கத்தை பயன்படுத்தவும். மென்பொருளை தொடர்ந்து புதுப்பிக்கவும்.
டிஜிட்டல் உலகில் நம் சாதனங்களை பாதுகாப்பது அவசியம். ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும். பாதுகாப்பான வைஃபை நெட்வொர்க்குகள் வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தவும்.
மின்னணு சாதனங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பது அவற்றின் செயல்திறனையும் வேகத்தையும் மேம்படுத்தும். ஆயுட்காலத்தையும் நீட்டிக்கும்.