Sign of a good family
Beautiful family

அழகிய குடும்பத்துக்கு அடையாளமான சில விஷயங்கள்!

Published on

மூகத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது ஒரு நல்லதொரு குடும்பம். குடும்பம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவும் இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து அது வளர்ந்து, படித்து தனக்கான ஒரு துணையைத் தேடி, திருமணம் செய்து, திரும்பவும் குழந்தைகளைப் பெறுவது என அனைத்து செயற்பாட்டிலும் குடும்பம் பங்கு வகிக்கிறது.

ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து அழகிய குடும்பத்தை உருவாக்குகிறார்கள். இதனைத் தொடர்ந்து உறவுகள் ஒன்றிணைந்து கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் என இரண்டு அழகுகளாகப் பிரிகிறது.

ஒரு ஆண், பெண், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து இருப்பது கூட்டுக் குடும்பம். ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் குழந்தைகளுடன் இருப்பது தனிக்குடும்பம் எனப்படுகிறது. அந்த வகையில் அழகிய குடும்பம் உருவாக வேண்டும் என்றால் அதற்கு மூன்று விஷயங்கள் கண்டிப்பாக;ஜ் தேவை. இது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

நாம் வீடுகளில் நமது சொந்தங்களுடன் ஒரு பொருளுக்காக நிறைய சண்டைகள் போட்டிருப்போம். ஆனால், அந்த சண்டைகள் காலப்போக்கில் ஒரு உறவையே இல்லாமல் செய்து விடும் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம், வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும், விட்டுக் கொடுக்க வேண்டும் என கூறவில்லை. ஆனால், உறவுகளுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம். இது ஒன்றும் அவ்வளவு தவறு இல்லை.

ஒரு குடும்பம் என்றால் அதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அதனை அணுசரித்து வாழ்க்கையின் அர்த்தத்தை சாதித்து காட்டுபவன் மட்டுமே சிகரத்தை தொடுகிறான். வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கும். சண்டைகள், பிரிவுகள், துயரங்கள், கவலைகள் என ஏராளமான துன்ப அலைகள் வந்தாலும், அணுசரிப்பு என்ற ஒரு தடை உங்களிடம் இருந்தால் நீங்கள்தான் இந்த உலகின் வெற்றியாளன்.

‘பெண்ணுக்குத் தேவை பொறுமை’ எனக் கூறுவார்கள். ஆனால், சில பெண்களிடம் இதனை எதைக் கொடுத்தாலும் எதிர்பார்க்க முடியாது. ஒரு பிரச்னை என்றால் இதனை இப்பவே முடித்து விட வேண்டும் என முயற்சிப்பார்கள். ஆனால், அதில் பதற்றத்தில் சில தவறுகளையும் விட்டிருப்பார்கள். இதுவே நாளைக்கு பெரிய பிரச்னையாக வந்து நிற்கும். எனவே பொறுமைதான் வெற்றியாளனின் முக்கியமான ஆயுதம்.

நமக்கான நேரம் நம்மை நோக்கி வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். ஆயிரம் முயற்சிகள் செய்து அடைய முடியாத ஒன்றை பொறுமையாக இருப்பவன் நேரம் பார்த்து அடைந்து விடுவான்.

அழகான குடும்பத்திற்கே உரித்தான சில விஷயங்கள்:

1. நாம் வெளியில் பெற்ற அறிவை பயன்படுத்த ஏற்ற இடம்தான் குடும்பம்.

2. இந்த உலகில் மிகவும் புனிதமான உறவு என்றால் அது, கணவன் – மனைவி உறவுதான்.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
Sign of a good family

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது.

7. குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல், ‘பொறுத்தலும், மறத்தலும்’ அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறைகொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால், ‘அவரவர் அடிமனமே’ தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகும்.

10. நல்ல குடும்பத்தில் ‘நன்மக்கள்’ தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

logo
Kalki Online
kalkionline.com