செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

வாஸ்து சாஸ்திர வீடு
வாஸ்து சாஸ்திர வீடுhttps://tamil.boldsky.com

வாழ்வில் சில எளிய வாஸ்து சாஸ்திர மாற்றங்களைச் செய்வதன் மூலம் செழிப்பைக் காணச் செய்யலாம். அப்படி சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளை காண்போம்.

* உங்கள் வீட்டில் நேர்மறை அதிர்வுகளை உருவாக்க வீட்டிற்குள் நுழையும் இடத்திற்கு நேரே உள்ள சுவரில் தெய்வத்தின் படம் வைப்பது சிறந்தது. அதாவது பிரதான கதவுக்கு எதிரே உள்ள சுவரில் காலியாக விடாமல் தெய்வத்தின் படம் வைப்பது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்.

* குவார்ட்ஸால் செய்யப்பட்ட ஸ்படிக உருண்டைகளை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பது மிகவும் நல்லது. இவை எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியவை. நல்ல உறவுகளுக்கு இளஞ்சிவப்பு நிற கிறிஸ்டல்களையும், சிறந்த நிதிக்கு ஆரஞ்சு நிற கிறிஸ்டல்களையும் வைப்பது சிறப்பு.

* உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் நுழைவாயிலில் குதிரை காலணியை வைப்பது சிறந்த அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். குதிரை காலணியை பிரதான நுழைவாயில் தலைகீழாக தொங்க விடாமல் (அவை எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும்) நேராக ஆணி அடித்து வைப்பது நேர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும்.

* நிதி சிக்கல்கள், நெருக்கடிகள், உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் ஓடாத கடிகாரங்கள், உடைந்த கண்ணாடிகள் ஆகியவற்றை அகற்றி விடுவது நல்லது. இவை எதிர்மறை ஆற்றல்களை வளர்க்கும். வீட்டில் நிதி சிக்கல்களை உருவாக்கும். துரதிஷ்டங்களை கொண்டு வந்து சேர்க்கும். எனவே உடைந்த எதையும் வீட்டில் வைக்காமல் அவ்வப்போது அகற்றி விடுவது நல்லது.

* உங்கள் வீட்டில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் நீங்கள் குடியிருந்தால் அங்குள்ள நீச்சல் குளம் சுத்தமாகவும், புதிய தண்ணீரைக் கொண்டதாகவும் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
நேரம் எனும் நில்லாப் பயணி!
வாஸ்து சாஸ்திர வீடு

* வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை போக்க சிறந்த வண்ணங்களை பயன்படுத்துவது நல்லது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளம் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்கள் நம் வீட்டு சுவர்களை அலங்கரிக்க எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நம்மை செழிக்க வைக்கும்.

* குடும்ப உறுப்பினர்களின் அழகான புகைப்படங்களை மாட்டி வைப்பது குடும்பத்தில் அழகிய பிணைப்பை ஏற்படுத்தி உறவை வலுப்படுத்த உதவும். வீட்டின் எல்லா பகுதிகளிலும் குறிப்பாக நுழைவாயில் இருண்டு இல்லாமல் நன்கு வெளிச்சமுடன் இருப்பது நல்ல ஆற்றலை  உண்டு பண்ணும்.

நம் வீடு மகிழ்ச்சி நிறைந்த இடமாக நிலவ இந்த குறிப்புகளை பின்பற்றி எதிர்மறை ஆற்றல்களை விலக்கி சந்தோஷமுடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com