அதிக ஸ்நாக்ஸ் சாப்பிடும் குழந்தையின் பழக்கத்தை மாற்ற சில எளிய வழிகள்!

அதிக ஸ்நாக்ஸ் சாப்பிடும் குழந்தையின் பழக்கத்தை மாற்ற சில எளிய வழிகள்!

குழந்தைகள் பிஸ்கட், சாக்லேட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் வகைகளை அதிகம் உண்கிறார்கள். அதனால் அவர்கள் உடல் பருமன் உள்ளிட்ட நிறைய நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த பழக்கத்தை நிறுத்த சில வழிகள்.

1. வீட்டில் சமைக்கும் உணவை சரியாக உண்ணாததால்தான் தின்பண்டங்களை அவர்கள் தேடுகிறார்கள். அவர்கள் வயிறு நிறைய உண்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

2. புரதச்சத்து நிறைந்த பயறு, சுண்டல் வகைகளை வேகவைத்து தாளித்துக் கொடுக்க வேண்டும். வேர்க்கடலை உருண்டை பொட்டுக்கடலை உருண்டை, முறுக்கு போன்றவற்றை சிரமம் பார்க்காமல் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

3. டிவி பார்க்கும்போது அவர்கள் கைகள் சும்மா இருப்பதால்தான் ஏதேனும் தின்ன வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. அப்போது. துவைத்த சின்ன சின்னத் துணிகளை மடிப்பது, வெங்காயம், பூண்டு உரிப்பது, புதினா இலைகளை கிள்ளுவது போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம்.

4. அதிகமான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டில் வாங்கி வைப்பதைத் தவிர்க்கவும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சாக்லேட், சிப்ஸ் வகைகள் என்று பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

5. அவர்களை போதுமான அளவு தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். வயிறு நிறைந்தால் ஸ்நாக்ஸ் தேட மாட்டார்கள்.

6. குழந்தைகள் விரும்பும் வகையிலான உணவுகளை வீட்டில் தயாரித்து கொடுக்க வேண்டும். இட்லி, தோசையையே விதவிதமாக செய்து தரலாம். மினி இட்லி, கேரட், பீட்ரூட் துருவலைக் கலந்து, சிவப்பு நிற இட்லி, ஆப்பிள், ஆரஞ்சு, ஓவல் மற்றும் ஆங்கில எழுத்துக்களின் வடிவத்தில் தோசை ஊற்றிக் கொடுக்கலாம். பொடி தோசை, முட்டை தோசை, மசாலா தோசை செய்து தந்தால் பிள்ளைகள் விரும்பி உண்ணுவர்.

7. பள்ளி இடைவேளையில் உண்ணுவதற்கு முளை கட்டிய அல்லது வேக வைத்த பாசிப்பயிறு, பழங்கள், உலர் திராட்சை, பேரிச்சை, பாதாம், முந்திரி வைத்துக் கொடுக்கலாம். வீட்டில் ஒரு கிண்ணம் நிறைய மாதுளை, ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, வாழை போன்ற பழக்கலவைகளை கொடுக்கலாம்.

8. சாக்லேட் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு  தேங்காய்த்துருவலுடன் நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

9. பாக்கெட் சிப்ஸ் கேட்டால் வீட்டிலேயே ராகிப் பக்கோடா, ரிப்பன் பக்கோடா செய்து தரலாம்.

10. காய்கறிகள், பழங்களின் நன்மைகளை எடுத்துச் சொல்லி, அதேசமயம் தேவையில்லாத தீனி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி எடுத்துச் சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com