குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க சில எளிய வழிகள்!

Lifestyle articles
To develop memory...
Published on

சென்ற தலைமுறையினருக்கு படிப்பதை தவிர பல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தது. எனவே பாடத்தை, ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது எளிதாக இருந்தது. இணையம் போன்ற கவனச் சிதறல்கள் இல்லாததால் எதையும் பார்த்ததும் நினைவில் இருத்திக் கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு இருந்தது.

தற்போதைய குழந்தைகளுக்கு படிப்பையும் தாண்டி பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதால் படிப்பதை, பார்ப்பதை நினைவில் கொள்வதை பழக்கமாக்கிக்கொள்ள சிரமப்படுகின்றனர்.

மூளை நரம்புகள் போதிய சக்தியின்மையால்  சோர்வு  அடைவதால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது. மனித மூளையில் 100பில்லியன் நரம்புகள் உள்ளன.

மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் நிரம்பிய மூளைப் பகுதி, போதுமான தண்ணீர் உடலில் இல்லையென்றால், மூளையின் செயல்பாடு குறைந்து வறட்சி அடையும். இதனால் சின்ன, சின்ன விஷயங்கள் கூட மறந்து போகும்.

சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, கவன குவிப்பு கற்றுத் தருதல், போன்ற இயற்கை வழிகளிலும் குழந்தைகளின் ஞாபக திறனை மேம்படுத்தலாம். பிள்ளைகளுக்கு ஒரு விஷயத்தை மனப்பாடமாக சொல்வதைவிட புரிந்து படித்தால் டக்கென நினைவில் பதியும்.

புரிந்து படிக்கும் பழக்கம், எதையும் எழுதி பார்க்கும் வழக்கத்தை கற்றுத்தர படித்தவை, பார்த்தவை மறக்காது. கவனச்சிதறல் இல்லாமல் எதையும் உற்று நோக்கி, கவனித்து ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறனை அவர்களிடத்து வளர்த்துவிட அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பலவித நீர் வகைகளும் அவற்றின் குணங்களும் பலன்களும்!
Lifestyle articles

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி இருக்கிறது. இவை நரம்பு மண்டலத்தை சீராக இயங்க உதவுகிறது.

வல்லாரை பொடி தினமும் பாலில் கலந்து தரலாம். காலை உணவை தவிர்க்காமல் ஒரு நாளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மூளையின் செயல்திறனை அதிகரிப்பது கோலைன். இது முட்டையில் அதிகமாக உள்ளது.

தினமும் முட்டை சாப்பிடுவதால் ஞாபக சக்தி, உடல் ஆரோக்கியம் மேம்படும். பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு உள்ளது. குளுட்டாமிக் அமிலம் உள்ளது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் குழந்தைகளின் உடல், மூளை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகின்றன.

எனவே குழந்தைகளின் ஞாபக சக்தி மேம்பட நல்ல உணவோடு, மூளையை பயிற்றுவிக்கும் கலையை கற்றுக்கொடுத்து விட அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com