திருமண வாழ்க்கை சிறக்க சில ஆலோசனைகள்!

Some tips for a successful married life
Some tips for a successful married life
Published on

ணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தங்களுக்கான இடைவெளியில் மற்றவர்கள் நுழைவதை விரும்ப மாட்டார்கள். அதேபோல், கணவனோ அல்லது மனைவியோ அவர்களுக்கு இடையே இருக்கும் காதலையோ, உறவையோ குறைவாக மதிப்பிடுவதோ அல்லது மதிக்காமல் நடப்பதோ, அவர்களின் தனிப்பட்ட நெருக்கமான தகவல்களை வெளியில் சொல்வதோ ஒருவர் மீது மற்றொருவருக்கு மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கும். அது சமயங்களில் திருமண வாழ்க்கையைக் கூட சிதைக்கும்.

எந்தவொரு பெண் பேராசையில் பொருளின் மீது பற்றுக்கொண்டு தனது வாழ்க்கை மற்றும் குடும்பப் பொறுப்புகளை தட்டிக்கழித்து விட்டு, குடும்ப செல்வங்களை தவறாகப் பயன்படுத்துகிறாரோ, பெரியவர்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார்களோ, குழந்தைகளை கவனிக்காமல் நடந்துகொள்கிறார்களோ அவர்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள். விரைவில் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.

அனைத்து ஆண்களுக்குமே அழகான, அறிவான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆசை இருக்கும். ஆனால், ஒரு பெண்ணின் அழகைக் காட்டிலும் அவளின் குடும்பப் பின்னணி மிகவும் முக்கியமானது. அழகான பெண் ஒழுக்கமில்லா குடும்பத்தில் இருந்தாலும் அவரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது.

ஒரு ஆண் எப்பொழுதும் சமூகத்தில் தனக்கு இணையான அந்தஸ்து உள்ள குடும்பத்திலோ அல்லது அதற்கு கீழே உள்ள குடும்பத்திலோதான் திருமண சம்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஒருபோதும் தனது தகுதிக்கு மீறிய இடத்தில் திருமண பந்தம் வைத்துக்கொள்ள கூடாது. அவ்வாறு வைத்துக்கொண்டால் சமூகத்தில் அவன் மதிப்பை இழக்க நேரிடும்.

அழகில்லாத பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு குடும்பத்தின் மதிப்பு நன்கு தெரிந்திருந்தால் அந்தப் பெண்ணை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளுங்கள். அப்படிப்பட்ட பெண் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதுடன் உங்கள் இரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருப்பார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் எளிய வழிகள்!
Some tips for a successful married life

ஆண், பெண் இருவருமே தங்கள் துணை மீது சமமான அளவில் காதலுடன் இருக்க வேண்டும். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இதுதான் அடிப்படையாகும். ஒருவேளை இதை ஒருவர் செய்யத் தவறினால் குறைந்தபட்சம் நேர்மையாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளையும் மதிக்கவும் வேண்டும். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியில்தான் முடியும்.

ஒரு ஆண் எப்பொழுதும் மனைவியை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ காயப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் குடும்ப உறவை இழக்க தயராகிக்கொள்ளுங்கள். அதேபோல, மற்ற பெண்ணுக்காக எப்பொழுதும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. இது உங்கள் குடும்பத்தில் தீராக் கவலைகளை உண்டாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com