உங்கள் வீட்டு பால்கனியை அழகுப்படுத்த சில டிப்ஸ்!

Beautiful balcony decoration ideas
Beautiful balcony decoration ideasImage Credits: Design Cafe
Published on

ம்முடைய வீட்டின் மாடிப் பகுதியை பெரும்பாலும் Relaxation spot ஆகவே பயன்படுத்துவோம். அப்பார்ட்மென்ட் போன்ற வீடுகளில் இருப்பவர்களுக்கு மொட்டை மாடி என்று தனியாக இருக்காது. சிறிய பால்கனிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பால்கனிகளை அழகாக மாற்றியமைக்க சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காணலாம்.

பால்கனி போன்ற சிறிய இடங்கள் இருக்கும்போது அங்கே Hanging garden அமைப்பது சிறந்தது. இது இடத்தை அடைக்காமல் இருப்பது மட்டுமில்லாமல், நம்மைச் சுற்றி ஒரு பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும். இங்கு வந்து அமரும்போது மனம் ரிலாக்சாக இருக்கும்.

பால்கனியில் அமருவதற்கு பயன்படுத்தும் பர்னிச்சர் மடக்கக்கூடியதாக இருப்பது நல்லது. அப்போதுதான் தேவையில்லாத நேரத்தில் மடக்கி வைத்துவிடலாம். இது இடத்தையும் அடைக்காது. Floor cushion and small benches அன்யோன்யத்தைக் கொடுக்கும், ரிலாக்சாக அமர்வதற்கும் வசதியாக இருக்கும்.

பர்னிச்சர்களை Terracotta, sandy beige, warm brown போன்ற நிறங்களில் பயன்படுத்துவது அழகைக் கூட்டும். பர்னிச்சர், அலங்காரப் பொருட்களுக்கும் இந்த நிறத்தைப் பயன்படுத்துவது பால்கனிக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.

Warm lights பயன்படுத்தி செய்யப்படும் விளக்கு அலங்காரம் பால்கனிக்கு மேலும் அழகைக் கூட்டும். கண்ணாடியில் இருக்கும் மெழுகுவர்த்தியை தரையில் ஆங்காங்கே அமைப்பது மேலும் அந்த இடத்தின் Mood ஐ மாற்றிமைக்கும். String light, pendent light பயன்படுத்தும்போது கண்ணைக் கவருவதாக இருக்கும்.

இயற்கையான கற்களான Sandstone, Cuddapah, Kota, slate போன்றவற்றை தரைக்குப் பயன்படுத்தும்போது தரை வழுக்குவதைத் தடுக்கலாம். இதில் விதவிதமான நிறங்களும், டிசைன்களும் உள்ளன.

செயற்கையான புற்கள் பயன்படுத்துவது பசுமையான லுக்கை கொடுக்கும். உண்மையிலேயே புற்களில் நடப்பது போன்ற உணர்வைத் தரும். நெருப்பு பட்டாலும் எரியக்கூடியத்தன்மை கிடையாது என்பதால் இதைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டின் அழகுக்கு அழகு சேர்க்க படிக்கட்டுக்களை இப்படி அமைக்கலாமே!
Beautiful balcony decoration ideas

பால்கனியில் ஊஞ்சல் அமைப்பது பால்கனியின் அழகைக்கூட்டும். அதுமட்டுமில்லாமல், ரிலாக்சாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான சிறந்த ஆப்சென்னாகவும் இருக்கும்.

தனிமையில் இருக்க விரும்புவோர் பால்கனியை மறைப்பதற்கு Bamboo curtains and carpets பயன்படுத்தலாம். இதன் எடையும் குறைவு என்பதால் பயன்படுத்துவது சுலபம். இது இடத்திற்கு நேர்த்தியான அழகைத் தருவது மட்டுமில்லாமல், தனிமை விரும்பிகளுக்கு தனிமையையும் தருகிறது.

கண்ணாடியால் ஆன மர பிரேம்களை உடைய Sliding முறையில் உள்ள கதவுகளை பால்கனிகளுக்கு பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் வீட்டு பால்கனியிலும் இதுபோன்ற சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து அழகாக மாற்றுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com