திருமண பந்தம் என்றும் மகிழ்ச்சியோடு நிலைத்திருக்க சில ஆலோசனைகள்!

திருமண பந்தம் நிலைத்திருக்க...
திருமண பந்தம் நிலைத்திருக்க...
Published on

பெரியவர்கள் பார்த்து நடத்திவைத்த திருமணமானாலும், இருமனம் இணைந்து காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இறுதி வரை மனம் ஒத்த தம்பதிகளாய் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். திருமண பந்தம் என்பது நீடித்திருக்க சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் மிகவும் அவசியமானவை.

மாறிவரும் நெருக்கடியான வாழ்க்கை முறையால் இன்று பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பதுடன் வாக்குவாதங்கள் முற்றி உறவில் விரிசலை ஏற்படுத்தி விடுகின்றன. வலுவான திருமண பந்தம் ஏற்படுவதற்கு தம்பதியரிடையே அன்பு, பாசம், நேசம், மனம் விட்டு பேசுதல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், சிறு சிறு தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருத்தல், விட்டுக்கொடுத்து போதல் போன்றவை அவசியம்.

தம்பதிகளுக்கு இடையே வீசும் தென்றல் காற்றுதான் நுழையலாமே தவிர, மூன்றாம் நபர்களின் தலையீடு அறவே இருக்கக் கூடாது. திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழக்கூடிய மறக்க முடியாத அற்புதமான நிகழ்வு. திருமண பந்தத்தில் மணமக்கள் இணைவது மட்டுமின்றி, எங்கோ பிறந்த இருவரின் குடும்பங்களும் ஒன்றாக இணையும் தருணம் இது.

திருமண பந்தம் என்றும் நிலைத்திருக்க செய்ய வேண்டியவை:

1. துணையின் தேவைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

2. சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாராட்டத் தவறாதீர்கள்! சின்னச் சின்ன விஷயங்களுக்கும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது உறவை பலப்படுத்தும்.

3. ஒருவருக்கொருவர் நேர்மையுடனும் திறந்த மனத்துடனும் இருங்கள்! எந்த ஒரு விஷயமானாலும் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பது அவசியம்.

4. எந்த முடிவு எடுக்கும்பொழுதும் துணையின் உணர்வையும் கணக்கில் கொள்ளுங்கள்! வாழ்க்கைத் துணையின் கருத்துக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இளம் வயதில் ஏற்படும் முடக்குவாத நோய்க்கான காரணங்கள் தெரியுமா?
திருமண பந்தம் நிலைத்திருக்க...

5. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது அவசியம். தேவைப்படும் சமயத்தில் மன்னிப்பு கேட்பதை தயக்கமின்றி செய்யலாம்!

6. உங்கள் திருமண பந்தம் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றால் வாழ்க்கைத் துணை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இறுக்கமான சூழ்நிலைகளில் அவருக்கு பக்கபலமாக இருப்பது மிகவும் அவசியம். தேவைப்படும் சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கப் பழகுங்கள்!

7. தம்பதியர்கள் வேலை சார்ந்து நிறைய நேரத்தை செலவழித்தாலும், வீட்டில் சேர்ந்திருக்கும் தருணங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து தரமான நேரத்தை செலவிடுங்கள்!

8. உறவை வலுப்படுத்த அன்பும் பரிவும் மிகவும் அவசியம். வாழ்க்கை என்றால் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லா சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொண்டு அனுசரித்து செல்லப் பழகுங்கள்.

9. ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம். ஆண்டவன் நமக்குக் கொடுத்த வாழ்க்கை எவ்வளவு அற்புதம் நிறைந்தது என்று மகிழ்ந்து நெகிழ்ந்து அனுபவித்து வாழ வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com