இல்லத்திற்கு அதிர்ஷ்டம் தரும் ஒலிகள்!

Sounds
Sounds

மனிதர்கள் உணர்வுகளால் ஆளப்படுபவர்கள். வீட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சி எனும் உணர்வு நல்ல ஒலி அலைகளில் உறுதி செய்யப் படுகிறது. வீட்டில் சிரிப்பொலி கேட்க சிறப்பான வாழ்வு மலரும். மகிழ்ச்சியான இல்லங்களில் லட்சுமி தேவி குடியிருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

அழுகை சத்தம் இல்லாத சிரிப்பும், மகிழ்ச்சியுமான இல்லங்களில் ஷீதேவி வாசம் என்றும் நிலைக்கும். மகிழ்ச்சியான வீட்டில் வருமானம் அதிகரிப்பதோடு அதிர்ஷ்டமும் வந்து சேரும்.

வீட்டில் கேட்க வேண்டிய ஒலி வளையல் சத்தம். பெண்களை கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்ள சொல்வதும் இதனால் தான். மெட்டல், பிளாஸ்டிக் வளையல்களை விட கண்ணாடி வளையல் ஓசை அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

அதே போல் மரக்கலன்களிலிருந்து இசைக்கப்படும் இசை, ஒலிக்கப்படும் ஒலி போன்றவையும் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை தருகிறது. வீடுகளில் மரத்தினால் ஆன இசைக்கருவிகளை வாங்கி வைக்கலாம். இப்படி அமைக்கப்படும் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

வீடுகளில் மரத்தினால் ஆன இசை ஒலிகளை எழுப்பக் கூடிய அலங்காரங்களை உள் அலங்கார மாக செய்யலாம். இப்படி அமைக்கப்படும் இல்லங்களில் குபேர சம்பத்து கிடைக்கும். இங்கெல்லாம் தடையில்லாத வருமானம் வரும்.

குடும்பத்தில் சில்லறை நாணயங்களின் சத்தமும் அதிர்ஷ்டத்தை தருமாம். இந்த நாணய ஒலியை பூஜை அறையில் கேட்குமாறு வைக்க மகாலெட்சுமி வாசம் நிரந்தரமாக இருக்கும். துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள்  வருவதற்கு சில்லறை நாணயங்களை ஒரு கண்ணாடி பவுலிங் போட்டு பூஜையறையில் வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பணம் சேமிக்கும் ஜப்பானிய ககீபோ பட்ஜெட் முறை பற்றி தெரியுமா?
Sounds

நாணயங்களை கொண்டு விக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்வது, அன்றாட செலவுக்கு அதிலிருந்து நாணயங்களை எடுத்து பயன்படுத்துவது போன்றவற்றை தொடர்ந்து செய்வதால் அந்த குடும்பத்தில் அதிர்ஷ்டத்தோடு  பண வரவும்   அதிகரிக்கும்.

வின்ட்ஸம் எனும் காற்றுக்கு அசையும் அலங்காரம், மழலைகளின் சந்தோஷ சிரிப்பொலி, தண்ணீர் விழும் அருவி அமைப்பு போன்றவை செல்வத்தை ஈர்த்து மகிழ்ச்சியை தரக்கூடியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com