

தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதிலும், வீடுகளுக்குள் இருக்கும் குளவிக் கூடுகள் பெரும்பாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது ஏதேனும் எச்சரிக்கையின் சகுனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், அதன் அறிவியல் உண்மை என்னவென்று பலருக்கு தெரியாது. அவசரபட்டு அதை விரட்ட நினைத்து பலபேர் அதனிடம் கொட்டு வாங்கியிருப்போம். சரி என்ன செய்யலாம் அதற்கு? தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் கலாச்சார மற்றும் சகுனப் பார்வைகள்
தமிழ்நாட்டில் பரவியிருக்கும் நாட்டுப்புறக் கதைகள் சில சமயங்களில் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள குளவிக் கூட்டை ‘செழிப்பு’ அல்லது தெய்வீகப் பாதுகாப்பின் அடையாளமாக சொல்கின்றன. அதோடு அதை துர்கா தேவியின் உக்கிரமான சக்தியுடன் தொடர்புபடுத்துகின்றன. இருப்பினும், மற்ற மரபுகளில் இது தீர்க்கப்படாத பிரச்னை அல்லது கெட்ட சக்தியின் எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இதனால் மனிதர்களாகிய நாம் அதை சீண்டும்போது, அவை ஆக்ரோஷமானவை என்று உணர்வோம். சொல்லப்போனால் குளவிகள் தேனீக்களை விட, எந்நேரமும் விழிப்புணர்வு, பாதுகாப்புடன் இருக்க நினைக்கும்.
குளவி கூடு பின்னால் உள்ள உண்மை:
உண்மை என்னவென்றால், குளவிகள் சகுனங்களை நமக்கு சொல்ல முயற்சிப்பதில்லை; அவை அதன் வம்ச கூட்டங்களை உருவாக்க பாதுகாப்பான, மறைவான இடங்களைத் தேடுகின்றன. இதில் நம் வீடுகள் இயற்கையான தங்குமிடங்களைப் போன்ற ஜன்னல்கள், மூலை முடுக்குகள் மற்றும் நிழலான பகுதிகளை வழங்குகின்றன. இதனால் இந்த இடங்களை தேர்ந்தெடுக்கின்றன.
குளவிகளால் புழுக்கள் மற்றும் பிற பூச்சிகள் வேட்டையாடப்படுகின்றன. இது இயற்கையாவே நம் வீட்டில் பூச்சிகள் குறைய பங்களிக்கிறது. எனவே அதன் கூடுகளை அதிர்ஷ்டம் அல்லது எச்சரிக்கையாக பார்க்காமல், அவை சுற்றுசூழக்கு உகந்த பல உயிரியல் தேவைகளை(biological necessities) பூர்த்தி செய்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்; அதைத்தான் அறிவியலும் காட்டுகிறது.
குளவிகள் ஏன் கூடுகளைக் கட்டுகின்றன
சொல்லப்போனால் குளவிகள் தலைசிறந்த பொறியாளர்கள். ஒரு கூடு என்பது அடிப்படையில் அவைகளுக்கு கோட்டையாகும். காகிதக் குளவிகள் அல்லது கொம்புக் குளவிகள் போன்ற குளவி இனங்கள், மர பொருட்களை மென்று அவற்றை அதன் உமிழ்நீருடன் கலந்து, காகிதம் போன்ற கூட்டை உருவாக்கி ‘கோண வடிவ’ அறைகளாக கட்டுகின்றன. இந்த அறைகள் முட்டைகளையும், சிறு குளவிகளையும் கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில் கூட்டின் வெளிப்புற அடுக்குகள், வெளியாட்களால் நிகழும் பிரச்னை மற்றும் வானிலை சார்ந்த பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கின்றன. இதோடு குளவிகள் அதன் கூடுகளின் வெப்பநிலையை சிறப்பாக கையாளுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காரணம் குளவிகள் தங்கள் இறக்கைகளை விசிறிபோல் பயன்படுத்தி அதன் உட்புறத்தைக் குளிர்விக்கின்றன அல்லது குளிர்ந்த இரவுகளில் வெப்பத்தைத் தடுக்கின்றன. சுருக்கமாக, கூடு என்பது குளவிகளுக்கு உயிர்வாழ்வதற்கான ஒரு மையமே தவிர, அது ஒன்றும் சகுனம் சார்ந்தது அல்ல.
வீடுகளில் குளவிகளை எப்படி கையாளலாம்?
வீட்டிற்குள் அதன் கூடு இருந்தால், அதைத் தொந்தரவு செய்யாமல் அகற்றுவதே பாதுகாப்பான அணுகுமுறையாகும். குளவிகள் தங்கள் கூடுகளை ஆக்ரோஷமாகப் பாதுகாப்பதால், அதை அகற்ற விஷேச பூச்சிக் கட்டுப்பாடு ஆய்வாளர்களின்(Professional pest control) உதவி தேவைப்படுகிறது.
பாதுகாப்பு இல்லாமல் அவற்றை அகற்ற அல்லது தொந்தரவு செய்வது அதனால் நமக்கு கொட்டுக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால், பெரும்பாலான குளவிக் கூடுகள் ஒரு வருடம் மட்டுமே நீடிக்கும். ஒவ்வொரு சீசன் முடிவில் அந்தக் கூடு இயற்கையாகவே அழிந்துவிடும்; இதனால் நீங்கள் கூட்டைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது மற்றொரு வழியாகும்.
சிலரின் ஞான வார்த்தைகள்:
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(Albert Einstein) ஒருமுறை குறிப்பிட்டார், “இயற்கையை ஆழமாகப் பாருங்கள், அப்போது நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக புரிந்துகொள்வீர்கள்.” இது குளவிக்கூடுகளின் விஷயத்திலும் இது பொருந்தும். ஒரு சகுனமாகத் தோன்றக்கூடிய ஒன்று, உண்மையில் இயற்கையின் ஒரு பகுதியே. நமக்கு எப்படி நம் வீடோ, அதுபோல் அதன் உயிர்வாழும் யுக்தியாக கூட்டை பயன்படுத்துகிறது.
ஆக, தமிழகக் கலாச்சாரத்தில் குளவிக்கூடுகள் செழிப்பிற்கான அறிகுறியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ சொல்லியிருக்கலாம்; ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால், அவை தங்கள் வம்ச கூட்டத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும் கூட்டை காட்டுகின்றன. இதிலுள்ள நடைமுறை உண்மை என்னவென்றால், குளவிகள் என்னமோ ‘விதியின் தூதுவர்கள்’ அல்ல, மாறாக அவை சுற்றுசூழலின் நண்பனாக செயல்படுகின்றன. எனவே அவற்றை நன்றாக புரிந்து கொண்டால், கலாச்சார ரீதியான சிந்தனையையும், உயிரியல் ரீதியான வித்தியாசத்தையும் புரியவைக்கிறது; இயற்கை நமக்கு மூடநம்பிக்கைகளை விட, அது கொடுத்திருக்கும் வளங்களைதான் பல உயிரினங்களின் உருவத்தில்(குளவி) நமக்கு புரிய வைக்க பார்க்கிறது.
ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு, வீட்டின் பாதுகாப்பையும் இயற்கை சமநிலையையும் ஒரே நேரத்தில் கையாளும் தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.