குடும்ப ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் சந்தேக நோய்!

கணவன் மனைவிக்குள் சந்தேகம்
கணவன் மனைவிக்குள் சந்தேகம்
Published on

ந்தேகம் என்பது ஒரு மிகப்பெரிய கொடிய நோய். இந்த சந்தேக நோய் ஒரு மனிதனுக்கு பிறவியிலோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய ஒரு விஷக்கிருமியாகும். ஒருவர் மனதில் சந்தேகம் என்று வந்துவிட்டால் போதும், முதலில் பாதிக்கப்படுவது அவருடைய ஆரோக்கியம்தான். சந்தேகம் என்பது மன அழுத்தத்தை கொடுத்து, நம் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சந்தேகம் என்பது ஆறாத ஒரு புற்றுநோய். இது வளர்ந்து கொண்டேதான் இருக்கும். மற்றொரு புறம், நமது மகிழ்ச்சியை அழித்துக் கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது, அந்நபரின் குடும்பம்தான். எத்தனை எடுத்துச் சொன்னாலும் பலர் இதனைப் புரிந்து கொள்வதில்லை. பின் உணர்ச்சி வேகத்தில் தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ்நாள் முழுதும் வருந்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சந்தேகம் எனும் நோய் அதனால் பாதிக்கப்பட்ட மனிதனை மரணக்குழி வரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டு என்பதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம். எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான செயல். ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே வீண் சந்தேகப்பட்டு வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.

ஒருவருக்கு வீண் சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள். நாம் வாழ்வதற்காகவே இந்த பூமியில் பிறந்து வந்து இருக்கின்றோம் என்பதை உணருங்கள். நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
உன்னத மருந்து உமிழ்நீர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கணவன் மனைவிக்குள் சந்தேகம்

இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், சிலர் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமலேயே, இவர்களே ஒரு பிரச்னையை மனதில் வளர்த்துக் கொண்டு சந்தேகப்படுவார்கள். தன் மீது மட்டுமல்ல, பிறர் மீது படும் சந்தேகம் இருக்கிறதே அதைவிடக் கொடுமையானது வேறு எதுவும் இல்லை. சந்தேகம் அதிகரிக்கும்போது மன வியாதியும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அனாவசியமாக மற்றவர்கள் மீது வீண் சந்தேகம் கொண்டு உங்களின் வாழ்க்கையில் அல்லல் பட வேண்டாம். சந்தேகம் என்ற நோயை விரட்டி சந்தோஷமாக குடும்பத்தை நடத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com