தரையில் எண்ணெய் படாமல்...

கைவேலை
தரையில் எண்ணெய் படாமல்...

- சுகுணா ரவி

திருகார்த்திகை 6.12.2022 அன்று வருகிறது. வீடுகள் எல்லாம் திருவிளக்கால் ஜொலிக்கப் போகிறது. பார்க்கவே ரம்மியமாக இருக்கும். எல்லா வீடுகளிலும் இப்போது படிகள், வீடு முழுவதுமாக அகல்விளக்கு ஏற்றுவார்கள். தரையில் படியும் தண்ணீர் லேசாகப் பட்டாலும் பயம்தானே! சுத்தம் செய்வதும்.

நாம் இப்போது எண்ணெய் தரையில் சிந்தாமல் என்னென்ன அழகாக செய்யலாம் என்று பார்க்கப் போகிறோம். நீங்கள் நினைப்பீர்கள் ஒரு அட்டையை வைத்தால் போதும்தானே என்று! போட்டோ எடுக்கும் போது அட்டைதானே! தெரியும். அதையே எப்படி அழகாக பண்ணுவது? என்று பார்ப்போம். செலவு இல்லாம் எப்படி பண்ணுவது?

தேவை: தாஜ்மஹால் டீ கோல்டன் கலர் டீ கவர் – 1 அல்லது 2, கல்யாண பத்திரிகை அட்டை – 1, பென்சில், வெள்ளை பசை, கத்தரிக்கோல்.

செய்முறை: முதலில் பத்திரிகையில் விருப்பப்பட்ட டிசைன் வெட்டிக்கொள்ளவும். பின் அதை என்ன மாதிரி செட் பண்ணலாம் என்று யோசித்து, அந்த டிசைனை கோல்டன் கவரிலும் வெட்டவும். அதை நாம் வெட்டிய டிசைன் மேல் கோல்டன் பேப்பரை ஒட்டவும். பின் தாமரை, பூ மாதிரி செட் பண்ணி ஒரு கேக் வெட்டி அட்டை மேல் கலர் பென்சிலால் வரைந்து, அதன் மேல் டிசைன் வைத்து விளக்கை வைக்கலாம்.   கீழே வடியாது. விளக்கு வைத்து விளக்கு ஏற்றும்போது டிசைன்ஸ் ரொம்ப அழகாக இருக்கும்.

ரு அட்டையை விளக்குபோல வெட்டிக் கொள்ளவும். கலர் பண்ணவும். அதை வேறு அட்டையில் விளக்கின் ஒளிபோல் வரைந்து அதில் விளக்கை ஒட்டவும். பின் அகல்விளக்கு செட் பண்ணி ஏற்றவும். இதுவும் ரொம்ப அழகாக இருக்கும்.

பாதாம் ஓடு டிசைன்

இதற்கு பாதாம் மேல் ஓடும், அட்டை,  பசை போதும். பாதாம் தோலை glue gun அல்லது பெவிக்காலால் பூ மாதிரி ஒட்டவும். வட்டமான அட்டையை வெட்டி அதில் ஒட்டினால் சுற்றி விளக்கு ஏற்றுவதற்கு அழகாக இருக்கும்.

பின்குறிப்பு: கோலங்கள் வரைந்து, அதை செட் பண்ணி அதைச் சுற்றி விளக்கு ஏற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com