குழந்தைகள் நடக்க Baby Walker பயன்படுத்துவோர் ஜாக்கிரதை!

Baby Walkers
The Dangers of Using Baby Walkers
Published on

குழந்தைகள் ஓரளவுக்கு நகரத் தொடங்கியதும் அவர்களுக்கு நடைப்பயிற்சி அளிக்க பெரும்பாலான பெற்றோர்கள் Baby Walker-ஐ பயன்படுத்துகிறார்கள். இதை அனைவருமே பயன்படுத்துவார்கள் என்றாலும், இதனால் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பதிவில் பேபி வாக்கரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அவை ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். 

பேபி வாக்கர்கள் குழந்தைகளுக்கு விபத்து மற்றும் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். குழந்தைகள் அதில் நடந்து செல்வது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் அதன் சக்கரங்கள் சிக்கிக்கொண்டு கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரம் குழந்தைகள் வேகமாக செல்லும்போது ஏதேனும் பொருட்களுடன் மோதி காயங்கள், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம். 

பேபி வாக்கர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் சரியாக நடப்பதற்கான இயக்கத் திறன்களை இத்தகைய சாதனங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதில்லை. அதற்கு மாற்றாக காலில் எட்டி உதைத்து சுழன்று சொல்வதை இத்தகைய வாக்கர்கள் ஊக்குவிக்கின்றன. இதனால் தவழ்ந்து செல்வது, எழுந்து நிற்பது, உதவியின்றி நடப்பது போன்ற முக்கியமான செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம்.

பெற்றோர்கள் குழந்தைகளை இதுபோன்ற வாக்கர்களில் அமர்த்திவிட்டு, தங்கள் வேலையைப் பார்க்க சென்று விடுகின்றனர். இதில் தங்களது குழந்தை பாதுகாப்பாக இருக்கும் என நம்புகின்றனர். இருப்பினும் எதிர்பாராத விபத்துக்கள் சில நொடிப்பொழுதில் நடந்துவிடலாம். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுதல், கூர்மையான பொருட்களுடன் மோதுதல் அல்லது பிற ஆபத்துகளில் குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 

கால் தசைகளுக்கு பயிற்சி அளிப்பது, சமநிலையாக இருப்பது போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமாகவே குழந்தைகள் படிப்படியாக நடக்க கற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மாற்றாக பேபி வாக்கரில் குழந்தையை அமர வைத்து நடக்கப் பழகினால், அவர்களது இயற்கையான நடக்கும் முறையில் இடையூறு ஏற்படலாம். இது அவர்களது ஒட்டுமொத்த இயக்க வளர்ச்சியையும் பாதித்து சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

பேபி வாக்கர்கள் குழந்தைகளின் இயக்கங்களை முற்றிலும் கட்டுப்படுத்தி விடுகின்றன. தரையில் தவழ்வது, கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது போன்ற அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்கள் முற்றிலுமாக தடைபடுவதால், குழந்தைகளின் அறிவுத்திறனிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
கால் ஆணி குணமடைய வேண்டுமா? இந்த இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள்! 
Baby Walkers

பேபி வாக்கர் சாதனத்தை பயன்படுத்துவதில் இருக்கும் ஆபத்துக்களை கருத்தில் கொண்டுதான் பல நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி அவற்றைத் தடை செய்துள்ளனர். இது குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அவர்களை பாதுகாத்து, இயற்கை வளர்ச்சியை ஆதரிக்கும் என்பதால், பேபி வாக்கர் இல்லாமல் குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்க வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 

இனி நீங்களும் உங்கள் குழந்தைகள் நடப்பதற்கு பேபி வாக்கர் பயன்படுத்தாமல், இயற்கையாகவே அவர்களை நடக்கப் பழகுங்கள். இவற்றிற்கு மாற்றாக நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மூன்று சக்கரங்கள் இருக்கும் நடைவேண்டியை பயன்படுத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com