நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வருபவர்கள் மிகவும் சோர்ந்து போய் இருப்பார்கள். அப்படி வருபவர்களுக்கு வீட்டிலே ரிலாக்ஸாக இருக்கும்படி சில மாற்றங்களைச் செய்து கொடுத்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்கள். அவை என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Relaxing corner: உங்களுடைய கணவர் வீட்டிற்கு சோர்வாக வரும்போது அவரை புத்துணர்ச்சியூட்டும் வகையிலே ரிலாக்ஸான கார்னரில் காபி ஸ்பாட் செய்து வைப்பது சிறந்தது. அதுவும் அவருக்குப் பிடித்த பொருட்களை வைத்து அந்த இடத்தை உருவாக்குவது இன்னும் நல்லது. உதாரணத்திற்கு, அவர் புத்தகப் பிரியராக இருந்தால், புத்தகங்கள் இருக்கக்கூடிய செல்ப் அவருடைய ரிலாக்ஸிங் கார்னரில் இருப்பது சிறந்தது. வீட்டிற்கு வந்ததும், அங்கே சென்று காபி குடித்து புத்துணர்ச்சி பெறுவார். இப்படிச் செய்தால் உங்கள் கணவர் அந்த சூழலை மிகவும் விரும்புவார்.
2. Personalized work space: உங்கள் கணவருக்கென்று ஒரு work space உருவாக்கித் தருவது நல்லது. உதாரணத்திற்கு, அவரிடம் நிறைய பைல்ஸ் இருந்தால் அதை சேமித்து வைப்பதற்கு இடத்தை உருவாக்கித் தரலாம். இல்லையென்றால், முழு நேரமும் உட்கார்ந்து வேலை செய்யக்கூடியவராக இருந்தால், அவர்கள் கம்பர்டாக அமர்ந்து வேலை செய்ய Ergonomic chairs போன்று வாங்கித் தருவது சிறந்தது.
இதுபோன்ற நாற்காலிகளில் அமரும்போது நம்முடைய உடலின் Postureஐ சரியாக வைத்துக்கொள்கிறது, அமருவதற்கும் கம்பர்ட்டாகவும் இருக்கும், வேலை செய்வதற்கு ஏற்றாவாறு இருக்கும். இப்படி உங்கள் கணவருக்கு அமைத்துக் கொடுத்தால், அவர் என்னதான் வேலையில் ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலும், அதை கண்டிப்பாக உங்கள் மீது காட்ட மாட்டார்.
3. Cozy bedroom: காலையில் எழுந்து சிறப்பாக வேலை செய்ய வேண்டுமென்றால், இரவு நன்றாகத் தூங்க வேண்டும். அதனால்தான் பெட்ரூமை அதற்கு ஏற்றவாறு அமைப்பது மிகவும் முக்கியம். உங்கள் படுக்கையறையை Cozy, neutral tone lights, blackout curtains வைத்து நன்றாக அமைப்பது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
இதையெல்லாம் செய்துபாருங்களேன். நீங்கள்தான் உங்கள் கணவருடைய பேவரைட் பர்சனாக இருப்பீர்கள். எல்லாவற்றையும் விட, உங்கள் கணவருக்காக நீங்கள் போடும் முயற்சிதான் அவருக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். முயற்சித்துப் பாருங்களேன்.