
ஒரு வழியா வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டுல (அக்டோபர் 17) ஆரம்பிச்சிருச்சு. வெயிலுக்கு இதமா இருந்தாலும், மழைக்காலம் வந்தாலே கூடவே வர்ற ஒரு பெரிய தலைவலி இந்த கொசுத் தொல்லைதான். ராத்திரி நிம்மதியா தூங்க முடியாது, காலையில பார்த்தா கை, கால்ல எல்லாம் கடிச்சு வச்சு, தடிச்சுப் போய் கிடக்கும். இந்த அரிப்பு ஒரு பக்கம்னா, டெங்கு, மலேரியா மாதிரி காய்ச்சல் வந்துடுமோங்கிற பயம் இன்னொரு பக்கம்.
நம்மில் பலர் உடனே ஐஸ் கட்டி எடுத்து வைப்போம். அது கொஞ்ச நேரத்துக்கு மரத்துப் போன மாதிரி ஒரு உணர்வைக் கொடுக்குமே தவிர, அந்த வீக்கத்தையும் அரிப்பையும் முழுசா குறைக்காது. ஆனா, இதுக்கு ஒரு சூப்பரான, இயற்கையான தீர்வு இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா?
எலுமிச்சை தைலம்?
நான் "எலுமிச்சை தைலம்" (Lemon Balm)னு சொன்னதும், நம்ம கடையில வாங்குற மஞ்சள் கலர் எலுமிச்சைப் பழம்னு நினைச்சுக்காதீங்க. இது வேற! இதோட அறிவியல் பெயர் மெலிசா அஃபிசினாலிஸ் (Melissa officinalis). இது ஒரு மூலிகைச் செடி, பாக்க நம்ம புதினா செடி மாதிரி இருக்கும். இந்தச் செடியின் இலைகளைக் கசக்கிப் பார்த்தா, லேசான எலுமிச்சை வாசனை வரும். வெளிநாடுகள்ல இதை டீ, ஸ்கின் கேர்னு பல விஷயங்களுக்குப் பயன்படுத்துறாங்க.
கொசுக்கடிக்கு இது எப்படி வேலை செய்யுது?
2023-ல் நடந்த ஒரு ஆய்வின்படி, இந்தச் செடியில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைஞ்சிருக்கு. குறிப்பா, இதுல 'ரோஸ்மரினிக் அமிலம்' மற்றும் 'ஃபிளாவனாய்டுகள்'னு சில இயற்கை ரசாயனங்கள் இருக்கு.
நீங்க கொசு கடிச்ச இடத்துல இந்த இலைகளைப் பயன்படுத்தும்போது, அது முதலில் அந்த இடத்துல ஏற்படுற வீக்கத்தையும், சிவந்து போறதையும் குறைக்குது. ரெண்டாவதா, அந்த அரிப்பை உடனே நிறுத்துது. அரிப்பு நின்னாலே போதும், நாம அதைச் சொறிய மாட்டோம். சொறியாம இருந்தாலே, புண்ணாகி, இன்பெக்ஷன் ஆகுறதைத் தடுத்திடலாம். இது சருமத்தை ரொம்ப குளிர்ச்சியா, இதமா வச்சுக்க உதவுது.
கொசுக்கடிக்கு எப்படிப் பயன்படுத்துவது?
பச்சை இலைகள்: இதுதான் சுலபமான வழி. இந்தச் செடியின் ஃப்ரெஷ்ஷான இலைகள் கிடைச்சா, அதை நல்லா கையால கசக்கி, சாறு வர்ற மாதிரி செஞ்சு, கடிச்ச இடத்துல நேரடியா தேயுங்க. அரிப்பு உடனே நிக்கும்.
டீ வடிவில்: இந்த இலைகளை வெச்சு டீ தயாரிச்சு (கொதிக்க வெச்சு), அதை நல்லா ஆற வச்சிடுங்க. பிறகு, ஒரு சுத்தமான பஞ்சை எடுத்து அந்த டீ-யில் நனைச்சு, கடிச்ச இடங்கள்ல ஒத்தடம் மாதிரி கொடுக்கலாம்.
எசென்ஷியல் ஆயில்: இந்த மூலிகையோட அத்தியாவசிய எண்ணெய் கடைகளில் கிடைக்கும். ஆனா கவனமா இருங்க, இதை நேரடியா சருமத்துல தடவவே கூடாது. ரெண்டு சொட்டு எலுமிச்சை தைலம் எண்ணெயை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில கலந்து, அதை கடிச்ச இடத்துல தடவலாம்.
இந்த மூலிகை கொசுக்கடியைக் குணப்படுத்துறது மட்டும் இல்ல, கொசுவையே நம்ம பக்கத்துல வர விடாம விரட்டும். ஏன்னா, இதுல 'சிட்ரோனெல்லல்' - ங்கிற ஒரு இயற்கையான வாசனைப் பொருள் இருக்கு. இந்த வாசனை கொசுக்களுக்கு சுத்தமா பிடிக்காது.
மழைக்காலம் முழுக்க கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளைப் பயன்படுத்தி, அதனால வர்ற அலர்ஜியால கஷ்டப்படுறதுக்கு பதிலா, இந்த 'எலுமிச்சை தைலம்' செடியை வீட்ல வளர்க்க ஆரம்பிக்கலாம்.