சலிப்பூட்டும் வாழ்க்கையை சாதிக்க வைக்கும் வாழ்வாக மாற்றும் ரகசியம்!

secret of happy life
secret of happy lifehttps://www.facebook.com

வாழ்க்கையில் அவ்வப்போது சலிப்பு தட்டுவது சகஜமானதான். ‘அது இயல்பானது, ஆரோக்கியமானது’ என்கிறார் புளோரிடா பல்கலைக்கழத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் வெஸ்ட் கேட். இவர் சலிப்பு தட்டும் இடத்தில் மதிப்புமிக்க ஒரு கற்றல் வாய்ப்பு உள்ளது என்கிறார். இந்தத் தருணத்தில் நீ செய்வது சரி வரவில்லை என்பதை உணர்த்துவதுதான் சலிப்பு தட்டும் உணர்வு என்றும் இவர் கூறுகிறார். எனவே, வாழ்க்கையில் சலிப்பு காணும்போது சங்கடப்படாதீர்கள். அதிலிருந்து சட்டென்று வெளிவந்து விடுங்கள். இனி, சலிப்பூட்டும் வாழ்க்கையை சாதிக்க வைக்கும் வாழ்வாக மாற்றும் ரகசியத்தை அறிவோமா?

வருங்கால திட்டங்கள் பற்றிய உங்கள் எண்ணங்கள், செயல் வடிவங்கள் போன்றவற்றை ஒரு கடிதம் வடிவில் உங்களுக்கு அனுப்பும்படி எழுதிக் கொள்ளுங்கள். அதை அவ்வப்போது பார்த்து செயல்படுத்த முயலுங்கள். அதில் உங்களுக்கு ஓர் உற்சாகம் பிறக்கும்.

சாகசம் செய்ய அடிக்கடி முயலுங்கள். சாகச மனநிலை உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் மீது உங்களுக்கே ஒரு மதிப்பு ஏற்பட உதவுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். "நடக்க சிரமப்படுகிறவர்களுக்கு நடப்பதே சாகசம்தான். வழக்கமானதை விட்டு புதிதாக முயற்சித்தால் அது சாகசமாக மாறிவிடும். அதில் கிடைக்கும் சந்தோஷமும், மனநிறைவும் நம்மை இளமைத் துடிப்புடன் இயங்க வைக்கிறது. சாகசங்கள் இளமையின் மந்திரம்" என்கிறார் பாலிவுட் பிரபல நடிகை ஒருவர்.

ஏதேனும் ஒன்றை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பிடித்த இசை ஆல்பமாக இருக்கலாம், புத்தகமாக இருக்கலாம், விரும்பிய பொருளாக இருக்கலாம். அது உங்கள் நேரத்தையும், உங்கள் உடலையும் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களை தற்காத்துக் கொள்ளும் கலை ஒன்றை கற்றுக்கொள்ள நேரம் செலவழியுங்கள்.இது உங்களுக்கு பயன்மிக்க பலனைத் தரும்.

உங்கள் தாத்தா, பாட்டி கடைபிடித்த உணவு முறைகளை, வாழ்வியல் முறைகளை தேடிப்பிடித்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு தற்போதும் பயனுள்ளதாக இருக்கலாம். எதையும் சிம்பிளாக செய்ய முயற்சி செய்யுங்கள். எதையும் சிம்பிளாக செய்து சிறப்பாக வாழ்வது ஜப்பானியர்களின் லைஃப் ஸ்டைல்.

வாழ்க்கையில் நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு அதிக சக்தி உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதனால் எதையும், ‘பாசிட்டிவ்’வாக பேசுங்கள். ‘நெகட்டிவ்’ வார்த்தைகளைப் பேசுவதை முற்றிலும் தவிருங்கள். ‘நிச்சயம் செய்கிறேன்’ என்று சொல்லுங்கள். ‘முடியுமான்னு பார்க்கிறேன்’ என்று பேசும் நெகட்டிவ் வார்த்தைகளை தவிருங்கள்.

இதையும் படியுங்கள்:
என்ன செய்தாலும் உடல் பருமன் குறையவில்லையா? அப்படியென்றால் இதை செய்து பாருங்களேன்!
secret of happy life

உங்கள் நடை, உடைகளில் ஒரு பெரிய மனிதத்தன்மையை கொண்டு வர முயலுங்கள். அது ஒர்க் அவுட் ஆகிறதோ இல்லையோ அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து உங்களை உற்சாகமுடன் வைத்துக்கொள்ள உதவும். வாழ்க்கை மிகவும் சிறியது என்பதை அடிக்கடி நினைவில் வைத்திருங்கள்.

தினமும் கம்ப்யூட்டரையும், செல்போன், லேப்டாப்யே கட்டிக்கொண்டு அழாதீர்கள். தினமும் ஒரு முழு பக்கமாவாது உங்களுக்குப் பிடித்ததை எழுதுங்கள். அது டைரி எழுதும் பழக்கமாகக் கூட இருக்கலாம். ‘உடலும் மனமும் ஒரு பேப்பரில் நன்றாக இணைகிறது’ என்கிறார் கையெழுத்து நிபுணர் ரப்சாக்கே போய்க். இது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது என்கிறார் அவர்.

உங்களது கெட்ட பழக்கம் ஏதாவது ஒன்றை தொலைத்து தலைமுழுக சபதம் எடுங்கள். முயற்சி செய்து பாருங்கள். அதற்கு துணிச்சல் வேண்டும். ஆனால், அதன் பலன் இனிதாக இருக்கும். சாப்பாட்டில் சிலவற்றை தவிர்த்து பாருங்கள். உங்கள் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் நோக்கில் சத்துள்ள உணவுகளை பிடிக்காவிட்டாலும் உணவில் சேர்த்துக்கொள்ள முயலுங்கள்.

வருடம் ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள். அது கோயில்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, அட்வென்ச்சர் டைப்பாக இருந்தாலும் சரி. மன அமைதியின்மை, மூளை செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போதைய எலெக்ட்ரானிக் முறை சாதனங்கள் அதற்கு வழி வகுக்கிறது. அட்லீஸ்ட் வீட்டிலாவது லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றை நோண்டாமல் இருக்கப் பாருங்கள். செல்போன்களை அளவாக பயன்படுத்தி வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com