இயற்கையின் விநோதம்!

இயற்கையின் விநோதம்!

மது உடல் நலத்துக்காக மருந்துகள் கிடைக்கும் ஃபார்மஸியைத் தேடி ஓடுகிறோம். நம்மைச் சுற்றியே, இயற்கையாக வளரும் காய்கனிகள் நமக்கு ஊட்டச்சத்தை அளித்து, பராமரிக்க வல்லதாய் சிருஷ்டி செய்த அந்த இறைவனின் வல்லமையை அறியாமலேய!

விந்தையிலும் விந்தை என்னவென்றால் எந்தக் காய்கறி மனிதனின் எந்த உறுப்புக்குப் பயன் தருமோ அந்த உறுப்பின் வடிவிலேயே அந்தந்த காய்கறி அமைந்திருப்பதுதான். என்னே இறைவனின் படைப்பில் அற்புதம்!

காராமணி (Kidney beans) மனித உடம்பின் கிட்னியைப் போல இருப்பதைக் காணலாம். சிறுநீரகத்தைப் பராமரிக்கவும் குணப்படுத்தவும் காராமணி உதவுகிறது.

கேரட்டை வட்டமாக நறுக்கிவிட்டு உள்ளே பாருங்கள். மனிதனுடைய கண், ப்யூபில் (கருமணி) ஐரீஸ் (கருவீழி), கதிர்கள் எல்லாம் தெரிகின்றதா? ஆமாம். கேரட்டை உட்கொண்டால் கண்களுக்கு ரத்த ஓட்டம் மேம்படுகிறது. கண்களுடைய சக்தியையும் மேம்படுத்துகிறது.

ல்லாரைக் கீரை அச்சு அசல் அப்படியே மனித மூளையின் வடிவமைப்பில் இருப்பதைப் பாருங்கள். ஞாபக சக்திக்கு வல்லாரைக் கீரை ஒரு வரப்பிரசாதம் என்பது நாம் அறிந்ததுதானே!

க்காளியை குறுக்காக வெட்டிவிட்டு உற்றுப் பார்த்திருக்கிறீர்களா? உள்ளே நான்கு அறைகள் (chambers) தெரியும். இருதயத்துக்கும் நான்கு அறைகள்தானே! தக்காளியில் உள்ள லைகோபின் (lycopin) இருதயத்தையும், ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது!

ந்தத் திராட்சையைக் கண்டீர்களா? குலைக் குலையாகத் தொங்கி, இருதய வடிவில் அல்லவா உள்ளது? ஒவ்வொரு திராட்சையும் உயிரணு போல் உள்ளதல்லவா? ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இருதயத்துக்கும் ரத்தத்துக்கும் வீரியத்தை அளிக்கிறது திராட்சை என்று!

ந்த வால்நட் கொட்டையைப் பாருங்கள். மனிதனுடைய மூளையி்ன் இடது, வலது பக்க அரைக்கோளம் (hemisphere) பெருமூளையைப்  (Cerebrum) போன்ற தோற்றம்! இந்த வால்நட் மூன்று டஜன்களுக்கும் அதிகமான நரம்பு அலைபரப்பிகளை (neuro transmitters) உருவாக்க வல்லது. மூளையின் சீரிய செயல்பாடுகளுக்கு உகந்ததும்கூட!

க்கரை வள்ளிக்கிழங்கைப் பாருங்கள். கணையத்தைப் போலவே உள்ளது. நீரிழிவு நோய் என அறிகுறியான க்ளைசெமிக் இண்டெக்ஸை சீர்படுத்துவதில் சக்கரை வள்ளிக்கிழங்குக்கு நிகரில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சைதூணுக்கும் (Olive) கருப்பைக்கும் (Ovary) உள்ள ஒற்றுமையக் கவனியுங்கள்!  கருப்பையின் ஆரோக்கியத்தைக் காக்கவும், செயல்களுக்குப் பலம் தரவும்  ஆலிவ் உதவுகிறதே!

கடவுள் ஃபார்மஸியை அறிந்தவர்களுக்கு வேறு ஃபார்மஸிகளைத் தேட வேண்டிய அவசியம் மிகக் குறைவல்லவா!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com