தம்பதியரில் ஐந்து வகை உண்டு; அதில் நீங்கள் எந்த ரகம் தெரியுமா?

There are five types of couples; Do you know which type you are?
There are five types of couples; Do you know which type you are?https://photographyconcentrate.com

ரு மனங்கள் இணையும் திருமணம் என்பது ஒருவருடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதரும் எப்படி தனிப்பட்ட குணாதிசயங்களை பெற்றிருக்கிறார்களோ, அதுபோல திருமணங்களும் தனித்தன்மை வாய்ந்தது. அவற்றை ஐந்து பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. மிகச் சிறந்த தம்பதிகள்: இவர்களை திருமண வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமான தம்பதிகள் என்றே சொல்லலாம். ஐந்து பிரிவுகளில் இவர்களே முதலிடம் வகிக்கிறார்கள். இவர்கள் நிறையப் படித்து பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்றிருப்பார்கள். திருமணத்தை ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகப் பார்ப்பார்கள். கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல ஒற்றுமை இருக்கும். விவாகரத்து என்பதைப் பற்றி இவர்கள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் நன்கு இணக்கமாகவும், ஒருவர் மேல் ஒருவர் உண்மையான பிரியமும் வைத்து திருப்தியான திருமண வாழ்க்கை நடத்துவார்கள். தங்கள் வாழ்க்கையின் அடித்தளம் தூய்மையான அன்பு என்று கருதும் இவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த காதல் கொண்டிருப்பார்கள்.

‘மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது’

என்ற பாடலுக்கேற்ப, கருத்தொருமித்த காதல் தம்பதிகள் இவர்கள்.

2. இணக்கமான தம்பதிகள்: இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். குழந்தை வளர்ப்பு மற்றும் தனிப்பட்ட குணாதிசயங்கள் இருவருக்கும் இருந்தாலும் இணக்கமாக வாழவே விரும்புவார்கள். பெரும்பாலும் ஒற்றைக் குழந்தைகளைக் கொண்ட இவர்கள், நிறைய படித்து இருப்பார்கள். நல்ல வேலையிலும் இருப்பார்கள். சிலரின் குடும்பத்தில் ஆண் குறைந்த வருமானம் ஈட்டினாலும் பெண்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் இருக்கும் சில வேறுபாடுகளை மீறி, இவர்கள் இணைந்து வாழவே விரும்புவர். பெரும்பாலும் விவாகரத்து பற்றி இவர்கள் யோசிக்க மாட்டார்கள். 94 சதவீதம் இவர்களுக்குள் திருமண வாழ்க்கையில் திருப்தியும் இணக்கமும் நிறைந்திருக்கும்.

3. பாரம்பரியமான தம்பதிகள்: இந்த வகையான தம்பதிகள் மிகச் சிறந்த பெற்றோர்களாக இருப்பார்கள். பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஊறி இருப்பார்கள். சிறு வயதிலேயே திருமணம் முடித்திருப்பர். படித்து இருப்பார்கள். கைநிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள். இவர்களில் பிரிந்து வாழ்வது மிகக் குறைவாகவும் விவாகரத்துகளும் மிகக் குறைவாகவே இருக்கும். மிகத் திருப்தியான வாழ்க்கை வாழ்வார்கள். திருமண பந்தத்தை மிகப் புனிதமான ஒன்றாக கருதுவதால் சமூகத்தின் பார்வையில் இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

4. சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகள்: சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய குறைந்த அளவு கல்வி அல்லது கல்வி கற்காத, குறைந்த அளவு வருமானம் உள்ள தம்பதிகள் இவர்கள். எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். கையில் ஆயுதம் வைத்துக்கொள்ளாத குறையாக எப்போதும் மல்யுத்த வீரர்கள் போல சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். விவாகரத்து பற்றி அடிக்கடி பேசிக்கொள்வார்கள். பல சமயங்களில் பிரிந்து வாழ்ந்து மீண்டும் இணைவர். ஆனாலும், பலர் அந்தத் திருமண பந்தத்தை தொடரவே செய்வார்கள். ஆனால், வாழ்நாள் முழுக்க சண்டையும் சச்சரவுமாக காலத்தைக் கழிப்பர்.

5. சிதைவுற்ற தம்பதிகள்: இந்த வகையான தம்பதிகள் எப்போதும் அதிருப்தியும் குறைந்தபட்ச திருமண சந்தோஷமும் கொண்டிருப்பர். ஒருவர் மேல் ஒருவர் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பர். தொண்ணூறு சதவீதம் இவர்களுக்குள் ஒத்துப்போகாது. இவர்களது திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com