புளிக்கரைசலில் இத்தனை விஷயங்களா?

புளிக்கரைசலில் இத்தனை விஷயங்களா?
Published on

மீப காலமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்டை போடாத பிரியாணி, மல்லித்தழை இல்லாத ரசம், கறிவேப்பிலை இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி என சமையல் ரசனை மாறிக்கொண்டே வருகிறது. ஏனென்று கேட்டால், ‘எப்படியும் சாப்பிடும்போது அனைத்தையும் தூக்கிப்போடத்தானே போகிறோம்’ என்று கூறுவர்.

அது மட்டுமின்றி, ‘ஸ்பைஸியா சாப்பிடக் கூடாது என இதையெல்லாம் நாங்கள் சேர்த்துக்கொள்வது இல்லை’ என சாதாரணமாகக் கூறுவர். ஸ்பைஸினா காரமா சாப்பிடுவது எனத் தெரியும். ஆனால், புளி எப்படி ஸ்பைஸி உணவுப் பட்டியலில் சேர்ந்தது என்பது தெரியவில்லை. புளியின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்தால் இனி அப்படிச் செய்யமாட்டீர்கள். அதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

குழந்தைகளுக்கு புளிக்குழம்பு பிடிக்காது என்று கூறுவர். காரணம் கேட்டால், ‘அதன் சுவை குறைவாகவும், குழம்பின் நிறம் கருப்பாக இருப்பதுதான்’ என்று கூறுவர். கருப்பு என்றாலே அழுக்கு பழுப்பு நிறம் என்று அவர்கள் நினைக்கக் காரணம், அவர்களின் ஆழ்மனதில் நாம் விதைத்த சில தவறான சிந்தனைகள்தான். ஆனால், புளி மருத்துவ குணம் கொண்டது என ஆப்பிரிக்க அப்பத்தாக்களுக்குத் தெரிந்துள்ளது. அதனால்தான் காய்ச்சல், அஜீரணம், சுவாச நோய்கள், காயத்தால் வந்த புண்களை சரிசெய்ய புளியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனை Journal of Ethnopharmacology (ஜர்னல் ஆஃப் எத்னோபார்மகாலஜி) என்ற புத்தகம் மிகவும் எளிமையாக நமக்குக் கூறுகிறது.

‘சமைக்கும்போது காய்கறிகளை புளிக்கரைசலில் ஊறவைத்துப் பிறகு வேக வைப்பதால் அதன் புரதச்சத்தும், கனிமச்சத்தும் பாதுகாக்கப்படுகின்றன’ என தேசிய உணவியல் கழகம் கூறுகிறது. நம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கம் மருத்துவ குணம் நிறைந்தது என்பதற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றே இதனைக் கூறலாம். இந்தப் புளிக்கரைசலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள டார்டாரிக் அமிலம், வைட்டமின் B வகைச் சத்துக்கள், கால்சியம், மருத்துவக் குணமுள்ள Phytonutrients போன்றவை அதிகளவில் உள்ளன. இரத்தக் கொழுப்புக்கும் உடலில் அதிகளவு சர்க்கரை சேர்வதற்கும் இந்தப் புளிக்கரைசல் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. உலகம் முழுவதும் கொண்டாடும் ஐரோப்பாவின் Worcestershire sauce (வோர்செஸ்டெர்ஷைர் சாஸ்), ஜமைக்காவின் Pickapeppa sauce (பிக்காபெப்பா சாஸ்) ஆகிய இரண்டிலும் நாம் குறைவாக நினைக்கும் புளிக்கரைசல்தான் மிக முக்கியமான மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருளாகச் சேர்க்கப்படுகிறது எத்தனை பேர் அறிவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com