பொது அறிவில் சிறந்து விளங்குபவருக்கு கொட்டிக் கிடக்குது வாய்ப்பு! அதில் இதோ 7..!

General knowledge opportunity
Job Opportunity

இன்றைய நவீன உலகில், வலுவான பொது அறிவை கொண்டிருப்பவர்களுக்கு பல்வேறு துறைகளில் பல கதவுகள் திறந்திருக்கின்றன. பொது அறிவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு உலகளவில் கிடைக்கும் சில நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. பத்திரிகை மற்றும் ஊடகம்:

journalist
journalist

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கு பொது அறிவில் வலுவான அடித்தளம் முக்கியமானது. நடப்பு நிகழ்வுகளைப் பற்றி அறிந்து அதன் ஆவணப்படங்களை உருவாக்குவது அல்லது அதை பற்றிய தெளிவான கருத்தை உலகெங்கும் பரப்புவது போன்ற பல்வேறு விஷயங்களை நன்கு புரிந்து கொள்பவர்கள் தான் இன்றைய நவீன ஊடகத்திற்கு பெரிதும் தேவை. ஆக அப்படிப்பட்ட இந்தத் துறையில் பல்வேறு வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

2. கல்வி சார்ந்த விஷயங்கள்:

Professor
Professor

விரிவான பொது அறிவு கொண்ட நபர்கள் கல்வித் துறையில் முன்னேற முடியும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்று கொடுப்பவர்கள், பல பாடங்களைப் பற்றிய பரந்த புரிதல் உடையவர்களாக இருக்க வேண்டும். கூடுதலாக, பாடத்திட்ட மேம்பாடு, கல்வி ஆலோசனை மற்றும் கல்வி ஆராய்ச்சி ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் பல்வேறு அறிவுத் தொகுப்புகளை கொண்டவர்களுக்குத்தான் மிகவும் பொருத்தமானது.

3. அரசு மற்றும் பொதுக் கொள்கை:

Government policy
Government policy

அரசு அல்லது பொதுக் கொள்கையில் பணிபுரிபவர்களின் அன்றாட பணி சிக்கலான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே. பல சிக்கல்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ற பயனுள்ள கொள்கைகளை உருவாக்குவதற்கும் ஒரு பரந்த அறிவுத் தளம் அவசியம். இந்தத் துறையில் கொள்கை ஆய்வாளர்கள், சட்டமன்ற உதவியாளர்கள் மற்றும் பொது விவகார நிபுணர்கள் என சில வாய்ப்புகள் உள்ளன.

4. வினா-விடை (QUIZ) நிகழ்ச்சிகள் மற்றும் போட்டித் தேர்வுகள்:

QUIZ , Competative exam
QUIZ , Competative exam

தங்கள் அறிவைச் சோதித்து மகிழ்பவர்களுக்கு, வினா-விடை நிகழ்ச்சியில் பங்கேற்பது அல்லது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது போன்றவை பலனளிப்பதாக இருக்கும். பல வினா-விடை நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்க பணப் பரிசுகளை வழங்குகின்றன, அதே நேரத்தில் போட்டித் தேர்வுகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் மதிப்புமிக்க பதவிகளைப் பெற வழிவகுக்கும்.

5. பயணம் மற்றும் சுற்றுலா:

Tourist guide
Tourist guide

பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் வரலாறு, கலாச்சாரம் மற்றும் புவியியல் பற்றிய ஆழமான புரிதல் நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா வழிகாட்டிகள், பயண எழுத்தாளர்கள் மற்றும் கலாச்சார ஆலோசகர்கள், வளமான பொது அறிவு உள்ளவர்களாக இருந்தால் தான் பயணிகளுக்கு செழுமையான அனுபவங்களை வழங்க முடியும்.

6. ஆலோசனை:

Advisor
Advisor

ஆலோசகர்கள் பெரும்பாலும் பல்வேறு தளங்களில் நிபுணர் ஆலோசனைகளை வழங்க வேண்டும். நிறைய பொது அறிவு உள்ளவர்கள் தான் வாடிக்கையாளர்களின் தேவைகளை விரிவாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளை விரைவாக வழங்க இயலும். இந்த துறையில் உள்ள வாய்ப்புகளில் மேலாண்மை ஆலோசனை, நிதி ஆலோசனை மற்றும் ஸ்ட்ராட்டஜிக் (Strategic) ஆலோசனை ஆகியவை அடங்கும்.

7. பொழுதுபோக்கு தொழில்

Director
Director

திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பணிகளுக்கு பொது அறிவு உள்ளவர்களே அதிகம் தேவை. காரணம், ஒரு படத்தின் கதை வெவ்வேறு கலாச்சாரங்கள், வரலாற்று சூழல்கள் மற்றும் சமூகப் போக்குகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவற்றை சரியாக புரிந்து கொண்டு அதை கச்சிதமாக திரையில் காட்டினால்தான் மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை பெற முடியும்.

ஆக, ஒரு வலுவான பொது அறிவு பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகளை தருகிறது. உலகத்தைப் பற்றிய உங்கள் பரந்த புரிதலை எல்லா துறைகளும் அங்கீகரிக்க காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே உங்கள் ஆர்வத்தை தழுவி, உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விரிவுப்படுத்தி கொண்டே இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com