Kidney Diet: சிறுநீரகத்தை பாதுகாக்க இதுவே சிறந்த உணவுகள்..!

Kidney Diet: சிறுநீரகத்தை பாதுகாக்க இதுவே சிறந்த உணவுகள்..!

டல் ஆரோக்கியமாக இருக்க உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வப்போது வெளியேற வேண்டும். உடல் கழிவுகளை சுத்தம் செய்து வெளியே அனுப்பும் வேலையை செய்வதுதான் நம் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும் போது, உடலின் இயல்பான பணிகள் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே சிறுநீரக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

சிறுநீரக நோய் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக சிறுநீரக தொற்று பிரச்சனை உள்ளவர்கள் , chronic kidney disease நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்மூடித்தனமாக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியாது. அவர்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்டால் மட்டுமே அவர்களது சிறுநீரகத்தால் முறையாக செயல்பட முடியும். அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய டயட் உணவுகள் குறித்து பிரபல மருத்துவ இதழான Healthline வெளியான தகவல்கள் இதோ..

சாப்பிட வேண்டிய உணவுகள்:

காலிஃப்ளவர், பளுபெர்ரீஸ், ரெட் கிரேப், ஆப்பிள், அண்ணாச்சி உள்ளிட்ட பழ வகைகளை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். முள்ளங்கி, ,முட்டைகோசு கீரை, வெங்காயம், குடை மிளகாய், பூண்டு ஆகிய காய்கறிகள் மற்றும் தானிய வகைகளையும் உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும், முட்டை வெள்ளைக்கரு, தோல் உரித்த சிக்கன், கொடுவா மீன் ஆகியவற்றையும் கிட்னி பிரச்சனைகளுக்கான டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

சாப்பிட கூடாத உணவுகள்:

  • பாக்கெட் ஸ்னாக்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

  • பீன்ஸ், நட்ஸ் உள்ளிட்ட பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். அதிகமான புரோட்டின் எடுத்து கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக மிக குறைந்த அளவே உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  • உருளைக்கிழங்கு, வாழைப்பழம் , ஆரஞ்சு, அவகேடா உள்ளிட்ட பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடல் வேண்டும்.

  • அட்வான்ஸ் நிலை கிட்னி பாதிப்புள்ளவர்களால் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது என்பதால் அதிகமான நீர்ச்சத்தை எடுத்து கொள்ளுவதை தவிர்த்த வேண்டும்.

  • நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளின் முக்கியமான அறிகுறி உடலில் சோடியம் நீர் சமநிலையை கட்டுப்படுத்தும் திறனை குறைந்து போவது. இதனால் அதிகப்படியான சோடியம் ரத்தத்தில் கலக்கிறது. இந்த நிலையைத்தான் ரத்தத்தில் உப்பு அதிகரிப்பு அல்லது ஹைப்பர் நெட்ரீமியா என்று கூறுகிறோம்.

  • இந்த நிலை ஏற்படக்கூடாது என்றால் சோடியம் குறைந்த (உப்பு குறைவான)உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கிங் செய்த ஸ்னாக் வகைகள் உள்ளிட்ட உப்பு சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

  • சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சையும், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com