இயர் பட்ஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Ear buts
Ear buts
Published on

ந்தப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இளைஞர்கள் பலராலும் விரும்பப்படும், வாங்கப்படும் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்றால் அது இயர்போன்தான். இயர் போன்களில்  பல ரகங்கள் உண்டு. தற்போது பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துவது இயர் பட்ஸ் என்ற ரகம்தான்.தொழில்நுட்ப புதுமையில் உருவான இயர் பட்ஸை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சந்தையில் தற்போது 500 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை இயர் பட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இயர் பட்ஸை பொறுத்த வரை ஒயருடன் இணைக்கப்பட்டிருப்பது இல்லை. எனவே, அது நேரடியாக wireless technology மூலம் மொபைல் போன், லேப் டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கப்பட்டு, ரேடியோ சிக்னய் அல்லது ஆடியோ சாதனங்களுக்கு கடத்துவதன் மூலம் செயல்படுகிறது.

குறிப்பிட்ட பிராண்ட் இயர் பட்ஸ்தான் சிறந்தது என்று இயர் பட்ஸின் தரத்தினை பிராண்டு மூலம் நிர்ணயிக்கக் கூடாது. 500 ரூபாய் கொடுத்து வாங்கும் இயர் பட்ஸ் கூட சில சமயம் சிறப்பாக பல ஆண்டுகள் ஆற்றலோடு இருக்கும். அதேசமயம் 5000 ரூபாய் கொடுத்து வாங்கும் இயர் பட்ஸ்கள் சில மாதங்களிலேயே செயலிழந்து போகலாம். இயர் பட்ஸ் வாங்குவதற்கு முன் அதன் டிசைன் உங்களுக்குப் பொருத்தமானதாக உள்ளதா மற்றும் உங்கள் காதுகளில் சரியாகப் பொருந்துவதாக உள்ளதாக என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த இயர் பட்ஸ் UNBOXING வீடியோவை பார்ப்பது நல்லது. தரம் குறைந்த இயர் பட்டினை மாற்றிக்கொள்ள அது ஏதுவாக இருக்கும். ஆன்லைனிலோ அல்லது நேரிலோ வாங்குவதற்கு முன்பு அதன் சிறப்பம்சங்கள் குறித்து தெளிவாகப் படிக்க வேண்டும். முதலில் Impeda எனப்படும் மின் தடுப்பு அதிகமாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். Impedance அதிகமாக இருந்தால் இயர் பட்ஸ் அதிக பேட்டரி சக்தியை எடுத்துக்கொள்ளாது.

இதையும் படியுங்கள்:
கருப்பைத் தொற்று அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!
Ear buts

Sensitivity அதாவது உங்கள் இயர் பட் SPF LEVELன் அளவை பரிசோதித்து கொள்ளுங்கள். அதிக சத்தம் உங்கள் காதுகளை பாதிக்கலாம். அது நீங்கள் கேட்கும் பாடலைப் பொறுத்தது. நீங்கள் அதிக பீட் கொண்ட பாடலை கேட்பவராக இருந்தால் அதிர்வெண் அளவு குறைவாக இருக்கும் இயர் பட்ஸை பயன்படுத்துவது நல்லது.

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது அதனைப் பயன்படுத்தினால் அது Sweat Resistant என்பதை உறுதி செய்யவும். noise cancelling இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் நீங்கள் பேசும்பொழுது உங்கள் குரலோடு சேர்த்து, சுற்றுப்புற சத்தமும் கேட்கும். ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு முன்பே இயர்பட் பயன்படுத்துபவரின் ஆலோசனை பெறலாம். ஒரு இயர் பட் வாங்கியவுடன் அதனை, ஹெட் போன் போல் அங்கும் இங்கும் தூக்கி வீசாமல், அதற்காக கொடுக்கப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

இயர் பட்டையும் ஹெட்போனையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com