
பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது? நாம் ஒரு திட்டம் வைத்திருப்போம். எதிா்பாா்த்த மாா்க் வராததால், நமது கல்லூாிப் படிப்பில் நாம் நினைத்ததை படிக்க முடியவில்லையே என்ற சங்கடம் வரலாம்.
பொதுவாக நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்சன்களை தோ்வு செய்து கொள்ள வேண்டும். இது அல்லது அது என தோ்வு செய்ய வேண்டும். நமது எதிா்காலத்திற்காக படிக்கிறோம். அதில் தெளிவான சிந்தனை தேவை!
பெற்றோா்களே தங்கள் மகனோ, மகளோ, மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே நிா்ணயம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களது விருப்பத்தை அவர்கள் மீது தேவையில்லாமல் சோ்க்க வேண்டாம். உங்களுடைய பிள்ளைகள் அவரவர்களது நண்பர்களுடன் சோ்ந்து என்ன படிக்கலாம் என முடிவு செய்து வைத்திருப்பாா்கள். அதற்கு ஏற்ப அவர்களை தயாா் செய்யுங்கள்.
வீட்டலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கல்லூாி இருந்து தாங்கள் படிக்க விருப்பப்படும் படிப்பு அங்கிருந்தால் அதில் சோ்ந்து கொள்ளலாம். திருச்சி, சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள கல்லூாியில் தான் படிக்க வேண்டுமென அடம் பிடிக்க வேண்டாம். கல்லூாி அருகாமையில் இருந்தால் தினசரி மிதிவண்டியில் கூட போய் வரலாம்.
அன்றைய தினம் நடத்தப்படும் பாடங்களை அன்றைய தினமே படித்து தயாா் செய்து கொள்வது நல்லது. கூடுமான வரையில் தேவையில்லா நட்புகளிடம் பழக்கம் வைத்துக் கொண்டு படிப்பில் நாட்டம் செலுத்தாமல் தானும் வருந்தி, குடும்பத்தினா்களுக்கும் சங்கடம் தரவேண்டாமே!
கல்லூாி படிப்பு காலத்திலேயே கம் ப்யூட்டர் பயிற்சி, தட்டச்சு பயிற்சி, தமிழ்நாடு தோ்வாணைய தோ்வு எழுதுதல் போன்ற விஷயங்களை பகுதி நேரமாக, படிப்பும் கெடாத வகையில் மேற்கொள்வது நல்லது தானே!
பாடங்களில் சந்தேகம் வந்தால் பேராசிாியர்களிடம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். கல்லூாிப் படிப்பு முடித்தவுடன் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க கல்லூாியில் சோ்வதை விட தனியாா் கம்பெனியில் வேலையைத் தேடிக்கொண்டு, அதில் வரும் ஊதியத்தை வைத்துக் கொண்டு தபால் வழியில் மேற்படிப்பு தொடரலாம். குடும்ப பாரத்தைக் குறைக்கலாமே!
பொதுவாகவே மாணவப் பருவம் என்பது தடம் மாறக்கூடிய பருவம் அதில் நமது எதிா்காலம் மற்றும் குடும்ப சூழல் புாிந்து பொறுப்போடு நடந்து கொள்வதே தற்கால இளைஞர்களுக்கு நல்லது. வயதான காலத்தில் பெற்றோா்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும், உபத்திரம் செய்யாமல் இருப்பது நல்லது!