
சூரிய ஒளியின் நேர்மறை சக்திகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜன்னல்களைத் திறந்து புதிய காற்றை அனுமதிப்பதன் மூலம் மோசமான ஆற்றலை வெளியேற்றுங்கள்.
ஒழுங்கீனம் எரிச்சலையும், எதிர்மறையையும் உண்டாக்கும். பயன்பாட்டில் இல்லாத பொருட்களை குவிப்பதைத் தவிர்த்து அதை நன்கொடையாக வழங்கவும். புத்தகங்களை சீராக அடுக்கவும். துணிமணிகளை நேர்த்தியாக மடித்து வைக்கவும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி உப்புக்கு எதிர்மறை சக்தியை உறிஞ்சும் சக்தி உண்டு. வீட்டின் தரையைத் துடைக்கும்போது சிறிது கல் உப்பு நீரில் சேர்க்கவும். உப்பு கலந்த நீரால் உங்கள் நுழைவாயிலைத் தடவுவது எதிர்மறையைத் தடுக்கிறது.
சில தாவரங்கள் எதிர்மறை சக்தியை உறிஞ்சும் பண்பை பெற்றுள்ளது. துளசிச்செடியை வடக்கு அல்லது வடகிழக்கில் வைப்பது எதிர்மறை ஆற்றல்களை விரட்டும். மூங்கில் செடி அதிர்ஷ்டத்தையும், கற்றாழை எதிர்மறை சக்தியை தடுக்கும் சக்தியும் உள்ளது.
மாலை நேரங்களில் கர்ப்பூரத்தை ஏற்றுவது எதிர்மறை ஆற்றலைத் தடுக்கும். சந்தனம் மற்றும் லாவெண்டர் போன்றவை எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியவை .
ஒலி எதிர்மறை ஆற்றலை மாற்றும் சக்தி படைத்தது. உங்கள் வீட்டில் தேங்கிப் கிடக்கும் எதிர்மறை ஆற்றலை அழிக்க உங்கள் வீடு முழுவதும் மணி அடிப்பது சிறந்தது. மந்திரங்கள் ஜபிப்பதும் எதிர்மறை சக்திகளை விரட்டும்.
வீட்டிற்குள் இருக்கும் நீர் விழும் மெல்லிய ஒலி நல்ல ஆற்றலை உருவாக்குகிறது. உள்ளே நீரூற்று இருப்பது சிறந்தது. உங்கள் வீட்டின் நீரூற்று வீட்டின் திசையில் பாயும் வகையில் வைக்க வேண்டும். வீட்டை விட்டுவெளியேறும் திசையில் அல்ல.
உங்கள் வீட்டில் இருக்கும் கனமான சாமான்கள் வெகு நாட்களாக நகர்த்தப்படாமல் இருக்கும்போது அதன் அடியிலும் சுற்றிலும் தூசிகள் படர்ந்திருக்கும். இவற்றை மறுசீரமைப்பு செய்யுங்கள்.
எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதில் ஸ்படிகங்ஙள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் ஜன்னல்கள் மற்றும் நுழைவாயிலில் ஸ்படிகங்கள் தொங்கவிடவும். ஒரு கிண்ணத்தில் ஸ்படிக கற்களை வைத்தும் வைக்கலாம்.
கண்ணாடிகளை சரியாகப் பயன்படுத்தி நேர்மறை ஆற்றல் உருவாக்குங்கள்.
நேர்மறை சக்திகளை ஊக்குவிக்கும் கூடிய பச்சை, பழுப்பு, க்ரீம் வெள்ளை மற்றும் நீல நிறத்தை தேர்ந்தெடுத்து அலங்காரம் செய்யுங்கள்.
வீட்டில் மயில் இறகுகள் வைத்திருப்பது எதிர்மறையை அழிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் இருந்தால் தூக்கி எறியவும்.
துக்கத்தை சித்தரிக்கும் சித்திரங்களை வீட்டில் தொங்க விடாதீர்கள்.
வீட்டு வாசலில் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்க எலுமிச்சை பச்சைமிளகாயைத் தொங்கவிடுங்கள்.