கிருமிகளை அழிக்க நாம் கவனிக்க வேண்டிய பொருட்கள்!

கிருமிகளை அழிக்க நாம் கவனிக்க வேண்டிய பொருட்கள்!
Published on

தினசரி வீடு பெருக்கித் துடைப்பதை பணிப்பெண்கள் செய்து விடுவார்கள். ஆனால் நுணுக்கமான சில வேலைகளை நாம்தான் செய்யவேண்டும். கண்ணுக்கே தெரியாத கிருமிகள் அவற்றில் தங்கி இருக்கும். அவற்றைப் போக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவையாவன...

சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், பூட்டுக்கள், படிக்கட்டு கைப்பிடிகள், திரைக்சீலைகள், சோபா கவர் போன்றவை பார்ப்பதற்கு சுத்தமாக இருந்தாலும் , பலரும் அடிக்கடி தொட்டு உபயோகிப்பது என்பதால்  அங்கெல்லாம் அழுக்குகள் சேரும். வீட்டை மொத்தமாக சுத்தம் செய்யும் போது இந்த சின்னச் சின்ன இடங்களையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி திரவத்தை ஸ்பிரே செய்து துடைத்து விடுங்கள். திரைச் சீலைகள், சோபா கவர்களை அவ்வப்போது துவைக்க வேண்டும். 

ரியாக கழுவப்படாத மிக்சி ஜாரின் அடிப்பகுதி, கிரைண்டரின் விளிம்புகள், காபி மேக்கர் போன்ற வற்றிலும் கிருமிகள் அடைக்கலம் புகலாம். பிரஷ் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மிக்ஸி ஜார், காப்பி வடிகட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. 

மைக்ரோவேவ்அவன் எப்போதும் சூடாக இருப்பதால் அங்கு அதிகமாக அழுக்கும் கிருமியும் படியாது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சுத்தம் செய்யாமல் விட்டால் இதற்குள்ளும் கிருமிகள் போய்ச் சேரும். எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி அவனின் உட்பக்கம் தேய்த்து சுத்தம் செய்யலாம். அவனில் சமைக்கும் போது எப்போதும் உணவு பாத்திரங்களை மூடி வைத்து சமைப்பது நல்லது.  இது உணவு பொருட்கள் உள்ளே சிதறுவதை தடுக்கும் .மேலும் சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கும். 

வீடு துடைக்கும் மாப் ,பெருக்கும் துடைப்பம் ஆகியவை வீட்டை சுத்தம் செய்வதாக நினைத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் ஈரமாக வைக்கும்  மாப்பில் கிருமிகள் சேரும் .துடைப்பமும் தனக்குள் அழுக்குகளையும் கிருமிகளையும் பாதுகாத்து வைக்கும். வீடு துடைக்கும் மாப்பை வெண்ணீரால் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். துடைப்பம் ஈரமானால் வெளியில் நன்கு தட்டிவிட்டு கொஞ்ச நேரம் வெயிலில் வைக்க வேண்டும். அதே போல் குப்பை கூடையே கிருமி நாசினி தெளித்து தினம் தோறும் சுத்தம் செய்து வைப்பது மிக மிக அவசியம். 

தினமும் நாம் வெளியே எடுத்துச் செல்லும் ஹேண்ட் பேக்,பர்ஸ், லேப்டாப் பேக் போன்றவை அதிகமான அழு க்கையும், கிருமிகளையும் வீட்டிற்கு கொண்டு வருகிறது. இந்தப் பைகளின் உட்புறமும் வெளிப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த பைகளில் உணவு பொருட்கள், மேக்கப் அயிட்டங்கள், சானிட்டரி நேப்கின் போன்றவற்றை தனி கவர்களில் போட்டே வைக்க வேண்டும். அதேபோல வீட்டில் தனியாக ஓர் இடம் ஒதுக்கி அங்கு ஹேண்ட் பேக் வைத்து எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வாரம் ஒரு முறை கிளீனிங் திரவத்தால் இவற்றை லேசாக துடைத்து இளம் வெயிலில் சற்று நேரம் காய வைத்து எடுப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com