This is a time of need for thrift.
Family management...

சிக்கனம் தேவை இக்கனம்… தொலைக்கவேண்டியது தலைக்கனம்!

Published on

குடும்பத்தை நிா்வாகம் செய்து கட்டுக்கோப்புடன் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பாா்த்து நிதானத்துடன் வாழ்க்கைச்சக்கரத்தினை  மெல்ல மெல்ல ஓட்டவேண்டும்,

அது பெண்கள் கையில்தான் இருக்கிறது, என்றாலும் கணவன்மாா்களுக்கும் அதில் முக்கிய பங்கு உண்டு! 

வரவிற்கேற்ப செலவு செய்திட்டால் சாலச்சிறந்தது.  விரலுக்கேற்ப வீக்கம் வருமே.  அதற்கு சரியான திட்டமிடல் வேண்டும்.  பொறுமை, நிதானம், இவைகளை கடைபிடிக்கவேண்டும், 

குறிப்பாக அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களிடம் சகோதரத்துவ மனப்பான்மையுடன் பழக்கம் வைத்துக் கொள்வது நல்லது!                                   

அதேபோல அவர்கள் வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு, நம் வீட்டு கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் மற்றும் தேவையில்லாத விஷயங்களிளை, அளவுககு மீறி பகிா்ந்து கொள்வதும் தவறு, எதற்கும் ஒரு எல்லைக்கோடு தேவை. அது தவறும் நிலையில்  ஒரு காலகட்டத்தில்  நட்பில் விாிசல் வர வாய்ப்புண்டு! 

பொதுவாக பக்கத்து வீட்டு தோழியிடம் நல்ல பழக்கவழக்கத்தின் அடிப்படையில் நாம்போய் ஒரு கரண்டி உப்பு கடனாக வாங்குவோம். அதை திருப்பிக்கொடுக்க மறந்து விடுவோம், அவர்களும் உப்பு போறாத விஷயம்தானே என கேட்க வேண்டாம் என இருப்பாா்கள்! 

அதையே சாக்காக வைத்துக்கொண்டு அவர்கள் ஒரு நாள் ஜீனி கேட்பாா்கள், நாம் முடியாது என சொல்ல முடியாது! இதிலிருந்து என்ன புாிகிறது. நாம் வாங்கியது உப்பு, அவர்களுக்கு கொடுப்பது ஜீனி. அவ்வளவு கறாா் போ்வழியாகவும் வாழமுடியாதுதான்,

இப்படித்தான் ஆரம்பித்து நகையை இரவல் வாங்கி திருமணம் போன்ற  விஷேஷங்களுக்கு சென்று வந்து அங்கு அதை  தொலைத்துவிட்டு வருவதுடன் எவ்வளவு தூரம் ஏழரையை இலவசமாய் இழுத்து வருகிறோம்!            இவையெல்லாம் நாமாக தேடிக்கொன்ட வினைகள்தானே! 

இதையும் படியுங்கள்:
பிறந்த நாளை வீட்டில் அல்லது பள்ளியில் கொண்டாடும் வழிமுறைகள்!
This is a time of need for thrift.

அதேபோல கணவனுக்கு வரவு அதிகமாக வரும் நிலையில் இந்த தொகை எங்கிருந்து வந்தது என கேள்விகேட்பது நல்லது! அதையும் திருமதிகள்தான்  கவனிக்க வேண்டும்! இருக்கும் பொருளையே மேலும் மேலும் வாங்குவது குழந்தைகளை வறுமையில் வளா்க்காமல் அவர்கள் போன பாதையில் அவர்களின் பிடிவாத குணங்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாமல் விடுவது எல்லாமே ஆபத்தான விஷயம்தான்! 

அவசரத்திற்காக ஒரு நாள் ஹோட்டலுக்கு போகலாம் அதையே வாடிக்கையாக்கிக்கொள்வது தவறான உதாரணமாகிவிடும்! 

தினசரி கொஞ்சம் தொகையாவது சேமிக்க வேண்டும் என்ற பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதும் நல்லது! 

அனைத்தும் பெண்கள் கையில்தான் உள்ளது என பாரத்தை அவர்கள் மீது சுமத்தாமல் கணவன்மாா்களும் அவர்களுக்கு துணையாய் இருந்தால் நல்ல குடும்பம் பல்கலைக்கழகமாக மாறிவிடுமே!

அதற்கு தேவை படாடோபம், ஆடம்பரம், தவிா்த்தல் நல்லது!

ஆக "சிக்கனம் "தேவை" இக்கனம்" மட்டுமல்ல எக்கனமும்தான் அது கணவனின் பங்களிப்போடு திருமதிகளிடம் இருப்பதே சிறந்த வெகுமதியாகும்.

logo
Kalki Online
kalkionline.com