பேரன்களை இப்படி வளர்க்கிறேன்!

பேரன்களை இப்படி வளர்க்கிறேன்!

ன் மகன்கள் வளர்ந்த காலத்தில் வீட்டில் பெற்றோரும், பள்ளியில் ஆசிரியர்களும் சமூகத்தில் பெரியவர்களும் சொல்லித் தரும் விஷயங்கள், நெறிமுறைகள் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இன்றோ பல்வேறு திசைகளிலிருந்து (பெரும்பாலும் தீய) சக்திகள் அவர்களைப் பாதித்துக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நாம்தான் அவர்களுக்குச் சரியாக வழிகாட்ட வேண்டும்.

என் பேரன்களை வளர்ப்பதில் மூன்று விஷயங்களில் நான் கவனம் செலுத்தியுள்ளேன். ஐந்து வயதுக்குள் அவர்களுக்கு சுவாரசியமான கதைகள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து அன்றாடம் தூங்கப் போகுமுன் சொல்லி வந்தேன். அதன்படி, மற்ற குழந்தைகளைப் போலவே அவர்கள் மாமிச மலைகளின் மல்யுத்தம், காட்டுக் கூச்சல்  ‘ராப்’ பாடல்கள், வலிப்பு நடனங்களை ரசிக்கிறார்கள் என்றாலும், இதற்கும் அழைத்துக்கொண்டு போனேன். இதிகாச, புராண புருஷர்களிடம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பக்தி ஆழமானது. நிரந்தரமானது. வாழ்க்கை முழுவதும் அது அவர்களுக்குப் பயனளிக்கும்.

அடுத்து குழந்தைகளுக்கு (நமக்கும்தான்) ‘க்விஸ்’, புதிர் வேடிக்கைக் கணக்குகளில் ஆர்வம் அதிகம். நகரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் பல மாடி. அடுக்குக் காலனி ஒரு தனி ‘காஸ்மாபாலிட்டன்’ நகரம் எனலாம். பல மொழிகள் பேசும் குடும்பங்கள், ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர், கலை, விளையாட்டுக்கென அதில் தனித்தனி மன்றங்கள் போலவே குழந்தைகளுக்கென்றே ‘க்விஸ்’, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கென தனித்தனி கிளப்கள் துவக்கியுள்ளோம். குறிப்பாகப் பல மொழிப் பத்திரிகைகளிலிருந்து திரட்டியது அவர்கள் சொல்லும் தகவல்கள், புதிர்கள், தந்திரக் கணக்குகள் பெரியவர்களுக்கே சவாலாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். வளர்ந்தபின் அவர்கள் எத்துறை சிறப்புப் பாடப்பிரிவில் சேர்ந்தாலும் பாடப் பிரிவில் சேர்ந்தாலும்  பாடப் புத்தகங்களுக்குப்பால் தகவல்களைத் தேடி அறியும் ஆர்வத்தை ஏற்படுத்தி முன்னேற இப்பயிற்சி உதவும் என்பது நிச்சயம்.

மகனுக்கும், மருமகளுக்கும் காலை முதல் இரவுவரை ஓயாத வேலை. சில எளிய விஷயங்களை முதியவர்கள் தான் சொல்லித்தர வேண்டும் என்று நம்புகிறேன். பொருள்களை அந்தந்த இடங்களில் வைத்து தேடாமல் அலையாமல் எடுத்தல், ஷூ சாக்ஸ் உள்பட ஆடை சுத்தம், விருந்தினரை வரவேற்பது, பணிவுடன் உரையாடுவது, வழியனுப்புவது, அஞ்சல், ரயில்வே, மின்சாரம், வங்கித்துறை சம்பந்தப்பட்ட படிவங்களை எப்படிப் பூர்த்தி செய்வது போன்ற நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படும் விஷயங்களைச் சொல்லித் தருகிறேன்.

அவர்கள் வளர்ப்பில் என் பங்குக்கு இவை சில ஆக்கப்பூர்வமான முயற்சிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com