இந்த 9 காய்கறிகள், பழங்களை இப்படித்தான் வாங்க வேண்டும்!

Vegetables, fruits
Vegetables, fruits
Published on

காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும் பொழுது பெரும்பாலான ஆண்கள் பயப்படுவது விலையை பார்த்து அல்ல, ‘நாம் வாங்கிச் செல்லும் காய்கறி எப்படி இருக்குமோ, வீட்டில் மனைவி என்ன சொல்வாளோ’ என்ற பயம் தான் பெரும்பாலான ஆண்களிடம் உள்ளது. பெரும்பாலும் நாம் அடிக்கடி வாங்கும் காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. கத்தரிக்காய் வாங்கும்போது நன்றாக காம்பு மூடிய காயாக வாங்க வேண்டும். பீன்ஸ், அவரை ஆகியவற்றில் விதைகள் தடிப்பாகத் தெரியாமல் இருந்தால் அவை பிஞ்சுக்காய்கள். நிறமும் பச்சையாக இருக்க வேண்டும்.

2. பீட்ரூட் வாங்கும்போது நகத்தினால் லேசாக அமுக்கினால் (கடைக்காரருக்குத் தெரியாமல்தான்) அதன் உட்புறம் நல்ல சிவப்பாக இருந்தால் அது நல்ல பீட்ரூட். புடலங்காய், வெள்ளரிக்காய், பீட்ரூட் ஆகியவற்றின் வெளிப்பக்கம் பளபளப்பாக இருக்க வேண்டும். மங்கலாக இருந்தால் அது நல்லதல்ல. முருங்கைக் காய் வாங்கும்போது அதை லேசாக முறுக்கிப் பார்க்க வேண்டும். முறுகினால் அது நல்ல காய்.

இதையும் படியுங்கள்:
தண்ணீர் தொட்டியை முறையாகப் பராமரிப்பது எப்படி?
Vegetables, fruits

3. முட்டைக்கோஸ் வெட்டி வாங்காமல் முழு கோஸாகவே வாங்குங்கள். அதிக எடையுடன் அடர்த்தியாக இருக்கும் கோஸ் நன்றாக இருக்கும். கேரட் தடித்ததாகவும், முரடாகவும் இருப்பதாக வாங்க வேண்டும்.

4. கீரைகள் பசுமையானதாகவும், பூச்சி அரிக்காததாகவும், இளந்தண்டுகளை உடையதாகவும் இருக்க வேண்டும். பழுப்பு இலைகள் இன்றி, வதங்கல் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

5. காலிஃப்ளவரில் புழுக்கள் இருக்கக் கூடாது. லேசாகத் தட்டினால் தெரிந்து விடும். முள்ளங்கி மேலே அடிபட்டது போல் காயங்களாக உள்ளதை வாங்கக் கூடாது. கறுத்துள்ளதையும் வாங்கக் கூடாது. வதங்கல் கூடாது. பிஞ்சாக வளைவுகள் இல்லாததாகப் பார்த்து வாங்க வேண்டும்.

6. வாழைக்காய், பாகற்காய் நல்ல பச்சை நிறத்துடன் இருக்க வேண்டும். அதில் மஞ்சள் நிறம் படர்ந்து இருத்தல் கூடாது.

இதையும் படியுங்கள்:
அறுவை சிகிச்சை நிபுணர்கள் பச்சை நிற ஆடை அணிவதன் ரகசியம்!
Vegetables, fruits

7. பழங்கள் வாங்கும்போது அவற்றின் இயல்பான நிறம் இருக்கின்றதா எனப் பார்த்து வாங்க வேண்டும். வாழைப்பழம் நல்ல மஞ்சள் நிறத்துடன் இருக்க வேண்டும். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம் இவற்றின் தோலில் கரும்புள்ளிகள் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, கொய்யாப்பழம் வாங்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும். தோல் தடிப்புடன் காய்ப்பழமாக இருக்கும் கொய்யாதான் ருசியாக இருக்கும்.

8. வாழைத் தண்டு நடுத்தண்டாக அதிக நார்கள் இல்லாமல் அடர்த்தியாக இளந்தண்டாக இருக்க வேண்டும். தேங்காய் முற்றிய கறுப்புக் காயாக இருந்தால் நிறைய தேங்காய்ப் பூ கிடைக்கும். குலுக்கிப் பார்த்தால் தண்ணீர் சத்தம் கேட்கக் கூடாது.

9. எலுமிச்சை சுத்த மஞ்சள் நிறத்துடன் மெல்லிய தோல் உடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிகச் சாறு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com