இக்கணம் சிக்கனம் தேவை!

இக்கணம் சிக்கனம்  தேவை!

னித வாழ்வில் முக்கியமான அம்சம் உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வீடு, ஆசைக்கு ஆஸ்திக்கு, இரு குழந்தைகள் நல்ல நிம்மதியான வேலை, கணவண், மனைவி, இருவருமே மாத வருமானம் ஈட்டினாலும் கடன் வாங்காமல் வாழ முடிகிறதா ?

இன்றைய தலைமுறைகள் வாழ்வியில் நடை முறை அப்படி இருக்கிறது முதல் காரணம் ஆடம்பரம், படாடோபம் , விரலுக்கேற்ற வீக்கமின்மை, ஹம்பக், டாம்பீகம் திட்டமிடாமத வாழ்க்கை, திணறத்தான் அடிக்கிறது,

ஓடி ஓடி உழைத்து என்ன பயன் சாியாண உணவை முறையாக,சுவையாக செய்து சாப்பிடமுடிகிறதா, இல்லையே ஆா்டா் கொடுத்தால் அத்தனையும் வீடு தேடி வந்துவிடுகிறது. வெந்தது பாதி வேகாதது பாதி இப்படித்தானே வாழ்கிறோம். அதையே சிம்பிளாக செய்யத்தொிந்து கொண்டால் நளன் கூட நம் சாப்பாட்டை விரும்புவானே!

அலுப்பு, சோம்பேறித்தனம் தொிந்த கொள்ள ஆா்வமின்மை இவைகள்தானே முட்டுக்கட்டை அதேபோல ஆடை அலங்காரம் விதவிதமாய் சேலைகள் சிறுது நேரம் திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு சென்று வர ஆடம்பரமாய் கால் லகரத்தில் பட்டுச் சேலைகள், பத்து டிசைன்களில், இவையெல்லாம் சிக்கனமாய் செலவு செய்யுங்கள் என அட்வைஸ் வழங்க லெட்சுமி ராமகிருஷ்ணனா வரஇயலும். அதேபோல் வீடு கட்டுதல் அகலக் கால் வைத்து ஆடம்பரமாய் செலவு செய்து வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி மாத தவணை கட்டமுடியாமல் திணறி, கடனைக்கட்ட, கடன் வாங்குதல், பின்னா் ஒரு காலகட்டத்தில் வீட்டையே விற்பது போன்ற நிலை, மற்றொரு ஆடம்பர விஷயம் விலையுயா்ந்த காா் வாங்குவது போன்ற அனாவசிய செலவுகள்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் டாம்பீகம், அனாவசிய பொருட்கள் வாங்குதல், இவைகளில் சிக்கனம் கடைபிடிக்க சொல்லியா தரவேண்டும் ,கூட்டுக்குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் தனிக்குடித்தன வாழ்க்கை வீட்டில் ஒரு பொியவா்கள் இருந்தால் வாழ்க்கை நடைமுறையை சொல்லிக் கொடுப்பாா்கள் அவா்கள் நம்மோடு இருப்பது பாராமாய் தொிந்தால் வாழ்க்கையே பாரம்தானே?

குழந்தைகளுக்கு சிறு வயதுமுதலே பணத்தின் அருமை தொியாமல் செல்லம் கொடுத்து வளா்ப்பது செல்போன் வாங்கிக் கொடுப்பது, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் உணவு வகைகளை கொடுக்காமல், பீட்சா, பா்கா், நூடுல்ஸ் இப்படி ஆரோக்கியம் கெடுக்கும் உணவுகளை கொடுப்பது இதெல்லாம் தொிந்தே செய்யும் தவறுதானே வரவுக்கேற்ற செலவு செய்ய பழகிக்கொள்ளவேண்டும். அதே நேரம் சிக்கனம் கடைபிடித்து சேமிப்புகளை வளா்த்து இருக்கும் இருப்பிற்கேற்ப செலவுகளை செய்து கூடுமான வரையில் கடன் வாங்காமல் தொிந்த உணவு வகைகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் தொட்டதற்கெல்லாம் ஹோட்டல் சாப்பாடுகளை தவிா்க்கலாமே?

இப்படி எடுத்து வைக்கும் அடிகளை மெல்ல மெதுவாக நிதானமாய் எடுத்து வைத்து கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவா் பரஸ்பரம் கலந்து பேசி விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தாலே வளமான வாழ்க்கையை தொய்வில்லாமல் கடன் வாங்காமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே, நம் வாழ்க்கை நம் கையில் .

தானே தானாய், வசந்தமாய் வசப்பட்டுவிடுமே, முயன்று பாருங்களேன் தோழிகளே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com