அடிக்கடி கோபப்படும் குழந்தைகளை கையாளும் வழிமுறைகள்! 

Angry Child
Tips for Parents to Handle Angry Children

கோபம் என்பது குழந்தைகள் உட்பட அனைவருக்குமே வரும் ஒரு இயல்பான உணர்வாகும். ஆனால் பெற்றோர்களுக்கு அடிக்கடி கோபப்படும் குழந்தைகளைக் கையாள்வது கடினமாக இருக்கலாம். இருப்பினும் சரியான அணுகுமுறையுடன் உங்களது குழந்தையை நீங்கள் கையாளும்போது, அவர்களே தங்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க நீங்கள் உதவ முடியும். இந்தப் பதிவில் கோபப்படும் குழந்தைகளை திறம்பட கையாளும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

அமைதியாக இருங்கள்: கோபமான குழந்தையை எதிர்கொள்ளும்போது பெற்றோர்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். பெரும்பாலும் குழந்தைகள் அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அப்படியே பிரதிபலிக்கிறார்கள். எனவே நீங்களும் அவர்களிடம் கோபத்துடன் நடந்துகொள்வது நிலைமையை மோசமாக்கலாம். எனவே குழந்தைகள் கோபப்பட்டாலும் நீங்கள் அவர்களை அமைதியாகக் கையாளுங்கள். 

கோபத்தைப் பற்றி கற்றுக்கொடுங்கள்: கோபம் என்பது ஒரு சாதாரண மனித உணர்ச்சி. அதை எவ்வாறு சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். கோபத்தின்போது அதிகப்படியாக கத்தாமல், அவர்களின் உணர்வுகளை முறையாக வெளிப்படுத்த குழந்தைகளை ஊக்குவிக்கவும். கோபப்படுவது தவறில்லை ஆனால் கோபப்பட்டு பிறரை காயப்படுத்துவது சரியல்ல என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். 

அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்: குழந்தைகள் ஏன் கோபப்படுகிறார்கள் அதில் ஏதேனும் நியாயமான காரணம் உள்ளதா? என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். அவர்களது கோபத்தை புரிந்துகொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். எல்லா தருணங்களிலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவும். இதன் மூலமாக குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். 

சிக்கலைத் தீர்க்க கற்றுக் கொடுங்கள்: கோபம் என்பது பெரும்பாலும் பிரச்சனை அல்லது விரக்தியிலிருந்து உருவாகிறது. அத்தகைய சிக்கல்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். தாங்களாகவே சிந்தித்து அனைத்தையும் எப்படி சரி செய்வது என்பதை அவர்களுக்கு கற்பிக்கவும். இந்த அணுகுமுறையானது குழந்தைகளே தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரியான தீர்வுகளைக் கண்டறிய உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
Share Market என்றால் என்ன? அட, முதல்ல இத தெரிஞ்சுக்கோங்கப்பா! 
Angry Child

முன்மாதிரியாக இருங்கள்: பெரும்பாலான பிள்ளைகள் தங்களது பெற்றோரின் நடத்தையைப் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். எனவே உங்களது குழந்தை கோபப்படக்கூடாது என்றால் நீங்கள் முதலில் கோபக்காரராக இல்லாமல் இருங்கள். நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்போது, உங்களது பிள்ளைகளே அதை சரியாகப் புரிந்துகொண்டு, அதிகமாக கோபப்படுவதை குறைத்துக்கொள்வார்கள். 

கோபமான குழந்தையை கையாள பொறுமை, புரிதல் மற்றும் முயற்சிகள் தேவை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி உங்களது குழந்தைகளின் கோபத்தைத் தணித்து, அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com