மழைக்காலத்தில் பயணிக்கும் பெண்களுக்கான டிப்ஸ்!

மழைக்காலத்தில் பயணிக்கும் பெண்களுக்கான டிப்ஸ்!
Published on

ழைக்கால பயணத்தின் போது தலையில் அதிக அளவு எண்ணெய் பூசுவது தவிர்க்க வேண்டும். மழையில் நனைய நேரிட்டால் தலைமுடி உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதே இதற்கு காரணம். இதனால் காய்ச்சல் சளி தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

யணங்களின் போது குடை ரெயின் கோட் ஜெர்கின் ஆகியவற்றோடு கூடுதலாக ஒரு செட் உடைய எடுத்துச் செல்வது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் அணிந்திருக்கும் உடை ஈரம் ஆகிவிட்டால் உடனே அந்த மாற்று உடைய அணிந்து கொள்ளலாம்.

ழைக்காலத்தில் மிகவும் லேசான துணிகளையும் வெளிர் நிற ஆடைகளையும் உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஜீன்ஸ் போன்ற தரமான துணிகளையும் அணிவதை தவிர்க்க வேண்டும்.

ழைக்காலங்களில் வெயில் அதிகம் இருக்காது என்பதால் சன் ஸ்கிரீன் பூசுவதை தவிர்க்கக்கூடாது. தண்ணீர் பட்டாலும் அழியாத வகையில் இருக்கும் வாட்டர் ப்ரூப் மேக்கப் பொருட்களை உபயோகிப்பது நல்லது.

ழைக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிக ஈரப்பதன் காரணமாக சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிக்கும் இதனால் முகப்பரு பிரச்சனை வரக்கூடும். எனவே மழைக்கால பயணத்தின் போது பேஸ் டிஸ்யூக்களைஉடன் வைத்துக் கொள்வது நல்லது.

மாதவிடாய் நாட்களின் போது பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மழைக்காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சானிடரி நாப்கின்கள் பெண்களை வைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் வலிகளை குறைக்கக்கூடிய ஹாட் வாட்டர் பேக்கையும் உடன் எடுத்துச் செல்வது நல்லது.

ழை நீரில் நடக்கும் போது வழுக்காமல் இருக்கும் வகையிலான காலணிகளை அணிய வேண்டும். ஹீல்ஸ் போன்ற காலணிகளை தவிர்க்க வேண்டும்.

ந்த சமயங்களில் பெரும்பாலும் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com