உங்க காரை எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா? நச்சுனு சில டிப்ஸ்! 

Tips to clean your car.
Tips to clean your car.
Published on

ஒரு கார் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல, அது நம்முடைய வாழ்க்கை முறையில் ஒரு பிரதிபலிப்பாகவும் உள்ளது. ஒரு சுத்தமான பளபளப்பான கார் நம்முடைய ஆளுமையையும், அந்தஸ்தையும் வெளிப்படுத்தும். ஆனால், நம்மில் பலர் காரை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பது குறித்து தெளிவில்லாமல் இருக்கிறோம். இந்தப் பதிவில் காரை சுத்தம் செய்வதற்கான சில எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ்களை விரிவாகப் பார்க்கலாம். 

காரின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யும் முறை: 

முதலில் காரின் மேற்பரப்பில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்க மைக்ரோ பைபர் துணியைப் பயன்படுத்தி நன்கு துடைக்க வேண்டும். 

பின்னர் ஒரு வாளியில் தண்ணீர் மற்றும் கார் வாஷ் சோப்பை கலந்து ஸ்பான்ச் பயன்படுத்தி காரின் மேற்பரப்பை மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி செய்யும்போது ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக கழுவ வேண்டும். 

கழுவிய பிறகு மீண்டும் மைக்ரோ பைபர் துணியைப் பயன்படுத்தி காரை நன்கு துடைத்து தண்ணீர் துளிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

பின்னர், வீல் கிளீனர் மற்றும் டயர் கிளீனரைப் பயன்படுத்தி வீல்கள் மற்றும் டயர்களை சுத்தம் செய்யவும். இறுதியாக கார் வாக்ஸை பயன்படுத்தி, சிறிது நேரம் கழித்து மென்மையான துணியால் துடைக்கவும். 

காரின் உட்புறத்தை சுத்தம் செய்யும் முறை: 

காரின் உள்ளே சுத்தம் செய்வதற்கு முன் உள்ளே உள்ள அனைத்து குப்பைகளையும் முதலில் அகற்ற வேண்டும். பின்னர், சீட்டுகளில் உள்ள தூசி மற்றும் பிசுக்கை வெளியேற்ற வேக்கம் கிளீனர் பயன்படுத்துங்கள். 

டேஷ்போர்டு மற்றும் கதவுகளை மைக்ரோ பைபர் துணியைப் பயன்படுத்தி மெதுவாக துடைக்கவும். பின்னர், கண்ணாடியில் கிளாஸ் கிளீனரை ஸ்பிரே செய்து சுத்தமாக துடைக்கவும். 

இதையும் படியுங்கள்:
சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க Rose Water இருந்தால் போதுமே!
Tips to clean your car.

காரை சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:  

காரை நேரடி சூரிய ஒளியில் நிறுத்தி சுத்தம் செய்ய வேண்டாம். கார் வாஷ் சோப்பை நேரடியாக காரில் மேற்பரப்பில் தேய்க்காதீர்கள். ஒரே துணியை எல்லா இடங்களிலும் வைத்து தேய்க்க வேண்டாம். சில இடங்களில் அதிக கரைகள் இருந்தால் கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்தி தேய்க்காதீர்கள். குறிப்பாக, இறுதியில் கார் வாக்ஸ் பயன்படுத்தும்போது கார் சூரிய ஒளியில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

காரை சுத்தம் செய்வதென்பது ஒரு கலை. மேற்கண்ட டிப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்களும் உங்கள் காரை எப்போதும் புதியது போல பளபளப்பாக வைத்திருக்கலாம். ஒவ்வொரு வாரமும் சிறிது நேரத்தை ஒதுக்கி காரை சுத்தம் செய்வதன் மூலம், உங்கள் காரின் ஆயுளை நீட்டித்து அதன் மதிப்பையும் அதிகரிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com