சீப்பு இடுக்கில் தேங்கி உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ்!

Comb
Comb
Published on

தினமும் நாம தலை சீவறதுக்கு சீப்பைப் பயன்படுத்துறோம். ஆனா, அது ஒரு பத்து, பதினைஞ்சு நாள் பயன்படுத்தினாலே சீப்பு இடுக்குகள்ல அழுக்கு தேங்கி, பார்க்கவே அருவருப்பா ஆகிடும். அழுக்கான சீப்பைப் பயன்படுத்தினா நம்ம தலைமுடிக்கு நல்லதில்ல. ஆனா, இனி கவலைப்பட வேண்டாம். இந்த அழுக்கையெல்லாம் வெறும் அஞ்சு ரூபாய்க்குள்ள வீட்லயே எப்படி சுத்தப்படுத்தலாம்னு சில சூப்பரான வழிகளைப் பார்க்கலாம் வாங்க.

நம்ம வீட்டுல இப்போ பெரும்பாலும் பிளாஸ்டிக் சீப்புகளைத்தான் பயன்படுத்துறோம். ஒரு சில நாட்கள் பளபளன்னு இருக்கிற சீப்பு, அப்புறம் அழுக்கு, பொடுகு, எண்ணெய் பசை, கிருமிகள்னு எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டு கருப்பாகிடும். இதெல்லாம் நம்ம தலையில இருந்து சீப்புக்கு வந்த அழுக்குகள். தலையில தேய்க்கிற எண்ணெய், உடைஞ்ச முடி, பொடுகு, நாம பயன்படுத்தற ஹேர் ப்ராடக்ட்ஸ்னு எல்லாம் சேர்ந்து சீப்பை அசிங்கப்படுத்திடும். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை சீப்பை சுத்தம் செய்யலைனா, ரொம்பவே அழுக்காயிடும். தலைமுடியை பாதுகாக்கிறதுக்கு எத்தனையோ விஷயம் செய்யற நாம, சீப்பை சுத்தம் செய்ய மறந்துட்டா, முடி ஆரோக்கியமா இருக்காது.

சீப்பை சுத்தம் செய்வது எப்படி?

1. வினிகர் மற்றும் பேக்கிங் சோடா.

ஒரு பெரிய பாத்திரத்துல கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணியை எடுத்துக்கோங்க. அதுல ஒரு டீஸ்பூன் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு நல்லா கலந்துக்கோங்க.

இப்போ உங்க சீப்பை அந்த தண்ணிக்குள்ள போட்டு அரை மணி நேரம் அப்படியே ஊறவிடுங்க. அரை மணி நேரம் கழிச்சு, ஒரு பழைய பல் துலக்கும் பிரஷ்ஷை எடுத்து, சீப்போட பற்களுக்கு இடையில மெதுவா தேயுங்க. அழுக்கு எல்லாம் ஈஸியா வந்துடும்.

கடைசியா, சீப்பை குழாய் தண்ணில நல்லா கழுவி, அஞ்சு நிமிஷம் வெயில்ல காயவிடுங்க. சீப்பு பளபளன்னு புதுசு மாதிரி ஆகிடும்.

2. பல் துலக்கும் பேஸ்ட்:

கொஞ்சம் பேஸ்ட்டை எடுத்து, தண்ணில நல்லா கலந்துக்கோங்க. இந்த கரைசல்ல உங்க பிளாஸ்டிக் சீப்பை ஒரு பத்து நிமிஷம் ஊறவிடுங்க. அப்புறம் ஒரு வெள்ளை துணி அல்லது பழைய பல் துலக்கும் பிரஷ்ஷை வச்சு சீப்பை நல்லா தேய்ச்சு சுத்தம் செய்யுங்க.

இதையும் படியுங்கள்:
கொஞ்சம் உப்பு, கொஞ்சம் கிராம்பு, கொஞ்சம் கற்பூரம்… இயற்கையான ஏர் ஃப்ரெஷ்னர் தயார்!
Comb

3. எலுமிச்சை மற்றும் உப்பு

ஒரு சின்ன பாத்திரத்துல ஒரு டீஸ்பூன் உப்பை போடுங்க. அப்புறம் ஒரு எலுமிச்சைப் பழத்தை பாதியா வெட்டி, அதோட சாறை உப்புல பிழிஞ்சு நல்லா கலந்துக்கோங்க. இந்த எலுமிச்சை தோலையே எடுத்து, உப்பு கலந்த சாறை தொட்டு சீப்போட பற்களுக்கு இடையில தேயுங்க. அழுக்கு ஈஸியா போயிடும்.

இந்த மாதிரி சிம்பிளான வழிகளைப் பயன்படுத்தி வெறும் அஞ்சு ரூபாய்க்குள்ள உங்க சீப்பை சுத்தமா வச்சுக்கலாம். ஆரோக்கியமான தலைமுடிக்கு சுத்தமான சீப்பு ரொம்ப முக்கியம். இனிமேல், சீப்பு அழுக்கானா தூக்கி எறிய யோசிக்காம, இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி புதுசு மாதிரி மாத்திடுங்க. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com