அச்சச்சோ! பாத்திரம் அடிபிடிச்சுப் போச்சா? இனி கவலை வேண்டாம்!

burnt vessel
Tips to make a burnt vessel look new!
Published on

நம் அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக பழைய பாத்திரங்கள் இருக்கும். அவை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம் அல்லது நீண்ட காலமாக நாம் பயன்படுத்திய பாத்திரங்களாக இருக்கலாம். காலப்போக்கில் இந்த பாத்திரங்கள் பழைய தோற்றத்திற்கு மாறுவது, அல்லது தவறுதலாக அடிபிடித்துப் போவது நம்மை வருத்தமடையச் செய்யும். ஆனால், சில எளிதான முறைகளைப் பயன்படுத்தி எந்த பாத்திரமாக இருந்தாலும் அவற்றை புதுப்பித்து, பழைய அழகை மீட்டெடுக்கலாம். 

பழைய பாத்திரங்களை புதுசு போல மாற்றம் வழிகள்: 

பழைய பாத்திரங்களில் கடுமையான கறைகள் இருந்தால் பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகர் கலந்த கரைசலை பயன்படுத்திப் எளிதாக சுத்தம் செய்ய முடியும். இந்த கரைசலை கறையின் மீது தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் அழுத்தி தேய்த்தால் கறைகள் நீங்கிவிடும். 

அடிப்பிடித்த கறைகளை நீக்க உப்பு மற்றும் தண்ணீர் கலந்த கரைசலை பயன்படுத்தலாம். இந்த கரைசலை அடிபிடித்த பகுதியில் தடவி சிறிது நேரம் கொதிக்க வைத்த பின்னர், நன்கு துலக்கினால் எரிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும். அதேபோல துருப்பிடித்த கறைகளை நீக்குவதற்கு ஈரமான காகிதத்தை கொண்டு தேய்த்தால் போய்விடும். அல்லது துடிப்பிடித்த பகுதிகளில் வினிகரை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் துலக்கினால், முற்றிலும் நீங்கிவிடும். 

பழைய பாத்திரங்களை மெருகூட்ட ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் சமையல் எண்ணெயைப் பயன்படுத்தலாம். எண்ணெயை பாத்திரத்தில் தடவி மெதுவாகத் துடைத்தால் பழைய பாத்திரங்கள் பளபளவென மின்னும். அல்லது பாத்திரங்கள் மீது தேய்ப்பதற்கென்றே கிடைக்கும் மெழுகுப் பொருட்களைப் பயன்படுத்தியும் மெருகூட்டலாம். இது பாத்திரங்களை நீண்ட நாட்கள் பளபளப்பாக வைத்திருக்கும். 

பாத்திரங்களை தேய்த்து கழுவினாலும் மீண்டும் பழையது போல மாறிவிடுகிறது என்றால், அதன் மேல் அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம். இந்த வண்ணங்கள் நீண்ட காலம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. அல்லது பாத்திரங்கள் முழுவதும் ஸ்பிரே பெயிண்ட் அடித்து பயன்படுத்தலாம். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் ஒரே ஒரு உருளி மட்டும் இருந்தால்... என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
burnt vessel

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள பழைய பாத்திரங்களை புதுப்பித்து அவற்றிற்கு புத்துயிர் கொடுக்கலாம். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பாத்திரங்கள் உங்கள் வீட்டிற்கு அழகையும் நவீன தோற்றத்தையும் கொடுக்கும். இதில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் பாத்திரம் எதில் தயாரிக்கப்பட்டது மற்றும் வடிவமைப்புக்கு ஏற்ப மாறுபடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com