குடும்ப நலன் சிறக்க...

குடும்ப நலன் சிறக்க...
Published on

மூக கட்டமைப்பின் அடிப்படையே குடும்ப உறவுகள் தான். எல்லா வயதினருக்கும் ஆதரவு மிக்க மற்றும் பாதுகாப்பு மிக்க சூழலைத்தருகிறது  குடும்ப அமைப்பு. குடும்ப உறவுகள் சீராக செல்வதும், சீரற்ற செல்வதும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கையில் தான் உள்ளது. குடும்ப பந்தத்தில் இருப்பவர்கள் மற்றும் குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறவர்கள் முதலில் மற்றவர்கள் மீது குறை சொல்லும் பழக்கத்தை கைவிட வேண்டும். பொதுவாக குடும்பத்தில் சிக்கல்கள் வர மற்றவர்களிடம் அதிகம் எதிர் பார்ப்பதும், அவநம்பிக்கையும் தான் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சில வேளைகளில் தியாக உணர்வுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும் எந்த பிரச்சினையும் வராது.

கணவர் விருப்பப்படி மனைவியோ, மனைவி விருப்பப்படி கணவனோ தங்களை மாற்றிக்கொள்ள முன்வர  வேண்டும். இதனால் இருவரிடமும் அன்பு மேலோங்கும். கணவன், மனைவியிடையே விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ சந்தேகம் என்பதை வாழ்வில் எந்த விதத்திலும் நுழைய விடக்கூடாது.

எந்த காரியமானலும் அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலமாக முடித்து விடாமல். குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து எதையும் ஒரு முறை யோசித்து செய்யுங்கள். டென்ஷனாக இருக்கும் போது அவசரமான தீர்மானங்களையோ, திட்டமிடுதலையோ தவிர்த்து விடுங்கள்.

குடும்பத்தின் முழு பொறுப்பு கணவன், மனைவி இருவருக்கும் தான். பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் ஒன்றுபட்டு செயலாற்றும் குடும்பங்கள் உயர்ந்த நிலைக்கு செல்கின்றன. ஆண்-பெண்ணை அடிமையாக நினைக்க கூடாது. பெண்-ஆணை துச்சமாக நினைக்க கூடாது. இருவரும் பரஸ்பரம் அன்பு செலுத்தி, நிதானமும், சகிப்புத்தன்மையும் கையாண்டால் எப்போதும் சந்தோஷம் தான்.

பல்வேறு குடும்பங்களில் பிரச்சினை வர காரணமாக இருப்பது பணம். எப்படி சம்பாதிப்பது என்பதில் பிரச்சினை இல்லை, அதை எப்படி செலவழிப்பது என்பதில் தான் பிரச்சினை. பண விஷயத்தில் கணவன், மனைவி இருவரிடமும் ஒளிவு மறைவு இருக்க கூடாது. இல்லாவிடில் குடும்பத்தில் குழப்பம்தான் வரும்.

உங்கள் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து ஒரு வேளையாவது பேசிச்சிரித்து நிதானமாக சாப்பிடுங்கள் அது உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடும் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். அடிக்கடி சிறுசிறு சுற்றுலா செல்ல வேண்டும் இப்படிப்பட்ட குடும்பம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.குறிப்பாக குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் டீன் ஏஜ் வயதினர்கள்  ஆரோக்கியமான உடல் மற்றும் மனநிலையில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மனம்  விட்டு பேசி மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டில் தினமும் சிறிது நேரம் யாருடைய மனதையும் புண்படுத்தாத அளவு கேலி, கிண்டல் செய்து சிரியுங்கள். மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள். மகிழ்ச்சி என்பது பக்கத்தில் இருப்பவர்களை எளிதாக பற்றிக்கொள்ளும் தீ போன்றது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால், உங்களை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.

வீட்டில் சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் சண்டை வருகிறது? உங்கள் மனைவி உக்கிரமாக சண்டையில் ஈடுபடுகிறரா! அனைத்துக்கும் காரணம் இரவு நேரத்தில் போதிய அளவுக்கு தூங்காமல் இருப்பது தான் என்கிறார்கள் ஆய்வில். எனவே, இரவில் நீங்களும் நிம்மதியாக போதிய நேரம் தூங்குங்கள் வீட்டில் மற்றவர்களையும் தூங்க விடுங்கள்.

குடும்பத்தில் தற்போது  உள்ள பலர் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பிரச்சினை என்று கவலையுடனும், டென்ஷனுடனும் காலையிலிருந்து, மாலை வரை வலம் வருகின்றனர். இது ஒரு பிரஷர் குக்கரில் அமர்ந்து இருப்பதற்கு சமம். இதுவே பின்னர் பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாகிறது. வேண்டாம் இந்த பிரஷர் குக்கர் வாழ்க்கை. திட்டமிட்ட வாழுங்கள், ரிலாக்ஸாக வாழுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com