டாய்லெட் கதவை திறந்தாலே மூக்கைப் பிடிக்கும் நாற்றமா? இந்த சின்ன ட்ரிக் செஞ்சா போதும்!

Bathroom Smell
Bathroom Smell
Published on

நம்ம வீட்டுக்கு யாராவது விருந்தாளி வராங்கன்னாலே நமக்கு வர்ற முதல் பயம், "ஐயோ! பாத்ரூம் சுத்தமா இருக்கா? வாசனை ஏதும் வருதா?" என்பதுதான். என்னதான் ஃபினாயில் ஊற்றிக் கழுவினாலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஒருவிதமான 'கப்'பென்ற நாற்றம் வர ஆரம்பித்துவிடும். ஆனால், எப்போதாவது பெரிய ஹோட்டல்களுக்கோ அல்லது தியேட்டருக்கோ சென்றால், அங்கே இருக்கும் ரெஸ்ட் ரூம்களில் மட்டும் எப்படி எப்போதுமே ஒருவித நறுமணம் வீசிக்கொண்டே இருக்கிறது? அவர்கள் பயன்படுத்தும் அந்தச் சின்னச் சின்ன ரகசியங்களை நாமும் தெரிந்துகொண்டால், நம் வீட்டு பாத்ரூமையும் சொர்க்கமாக மாற்றலாம். 

ஈரப்பதம்தான் முதல் எதிரி!

ஹோட்டல் நிபுணர்கள் சொல்வது இதுதான்: "துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமே ஈரம் தான்." குளித்துவிட்டு வந்ததும் பாத்ரூம் கதவைச் சாத்தி விடுகிறோம். உள்ளே இருக்கும் ஈரம் காயாமல், பூஞ்சைகளை உருவாக்கி, ஒருவித மக்கு வாசனையை உண்டாக்கும். அதனால், எப்போதும் பாத்ரூமில் 'எக்ஸாஸ்ட் ஃபேன்' (Exhaust Fan) ஓடுவதை உறுதி செய்யுங்கள் அல்லது ஜன்னலைத் திறந்து வையுங்கள். தரை எப்போதுமே உலர்ந்து இருக்க வேண்டும்.

டிஷ்யூ பேப்பர் ரோல் தந்திரம்!

இதுதான் அந்த 'சீக்ரெட்' டிப்ஸ். பெரும்பாலான ஸ்டார் ஹோட்டல்களில் இதைச் செய்வார்கள். உங்க பாத்ரூமில் டிஷ்யூ பேப்பர் ரோல் மாட்டி வைத்திருப்பீர்கள் இல்லையா? அந்தப் பேப்பரின் நடுவில் ஒரு கெட்டியான அட்டை இருக்கும். உங்களுக்குப் பிடித்த எசென்ஷியல் ஆயில்- உதாரணமாக லெமன் கிராஸ், லாவெண்டர் அல்லது ஜாஸ்மின் எண்ணெயை எடுத்து, அந்த அட்டைப் பகுதியில் நான்கு சொட்டு விட்டுவிடுங்கள். ஒவ்வொரு முறை அந்தப் பேப்பரைச் சுழற்றும்போதும், அந்த வாசனை காற்றில் கலந்து, பாத்ரூம் முழுவதும் ஒரு மெல்லிய நறுமணத்தைப் பரப்பிக் கொண்டே இருக்கும். இது பல நாட்கள் நீடிக்கும்.

கற்பூரம் மற்றும் பேக்கிங் சோடா!

விலையுயர்ந்த ஏர் ஃப்ரெஷ்னர்கள் உடலுக்குக் கேடு. அதற்குப் பதிலாக, ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடாவைக் கொட்டி, பாத்ரூமின் மூலையில் வையுங்கள். இது காற்றில் இருக்கும் கெட்ட வாசனையை அப்படியே உறிஞ்சிவிடும். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு கற்பூரத்தை நசுக்கிப் போட்டால், பூச்சிகளும் வராது, வாசனையும் தெய்வீகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குப்பை என கூட்டித் தள்ளும் இலைச் சருகின் மகத்துவம் அறிவோம்!
Bathroom Smell

குப்பைத் தொட்டி பராமரிப்பு!

பாத்ரூமில் வைக்கும் குப்பைத் தொட்டிதான் நாற்றத்தின் பிறப்பிடம். அதன் அடியில் ஒரு காட்டன் பஞ்சில் நறுமண எண்ணெயை நனைத்துப் போட்டுவிட்டு, அதற்கு மேல் குப்பை பையை மாட்டுங்கள். இது கெட்ட வாடையை வெளியே வரவிடாமல் தடுக்கும்.

பாத்ரூமை வாசனையாக வைத்துக்கொள்ள ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்வது, இயற்கையான நறுமணங்களைப் பயன்படுத்துவது போன்ற இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும். அடுத்த முறை உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், "எந்தப் பிராண்டு ரூம் ஸ்ப்ரே யூஸ் பண்றீங்க?" என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com