பொம்மைகள்- சில உண்மைகள் – தெரிந்து கொள்வோமா?

பொம்மைகள்- சில உண்மைகள் – தெரிந்து கொள்வோமா?
Published on

குழந்தைகளின் முதல் விளையாட்டுப்பொருள் பொம்மைகள் தான்.பொம்மைகளை விரும்பும் பெரியவர்களும் உண்டு.குழந்தைகளின் அறிவு திறனை வளர்ப்பதோடு, அவர்களின் மகிழ்ச்சிக்கும்  காரணமாக இருக்கும் பொம்மைகளை எகிப்தியர்கள் காலத்திலேயே செய்ய தொடங்கி விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மொகஞ்சாதாரோ, ஹரப்பா அகழ்வராய்ச்சியின் போதே பொம்மைகளை கண்டறிந்துள்ளனர்.

குழந்தைகளின் தனிமையை தவிர்த்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விளையாட்டு பொம்மைகள் நவீன காலத்தில் உருவானது அல்ல.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொம்மைகள் இருந்திருக் கின்றன. முதன் முதலாக மரக்கட்டைகளில் தான் பொம்மைகள் செய்யப்பட்டன. பின்னர் துணிகளில் செய்துள்ளனர், பின்னர் காலப்போக்கில் களிமண்ணை உபயோகித்தனர் .

கிரீஸ் நாட்டில் பெண்கள் தங்களின் திருமண நாளுக்கு முன் தினம் வரை பொம்மைகள் வைத்து விளையாடு வார்களாம். மத்திய காலத்தில் துணியில் செய்யப்பட்ட பொம்மைகள் பிரபலமாக இருந்தன. 1700 ஆண்டுகளில் மர பொம்மைகள் தான் வழக்கில் இருந்தன. 1800 ஆண்டுகளுக்கு பிறகு தான் துணி, பேப்பர், மெழுகு, சைனா களிமண் என பல தரப்பட்ட பொருட்களில் மொம்மைகள் உருவானது.

1960 வரை பொம்மைகள் பெண் குழந்தைகளுக்கு தான் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தான் ஆண் குழந்தைகளுக்கு மொம்மைகள் வெளி வந்தன. உலகில் பொம்மைகளை இரண்டு வகைகளாக    பிரிக்கிறார்கள். ஒன்று அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள், மற்றொன்று சாதாரண பொம்மைகள். உடை அலங்காரங்கள் அந்தந்த நாடுகளின் கலாச்சார உடைகளுடன் விளங்கின.  19ம் நூற்றாண்டில் அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் நவீன ரக பொம்மைகள் விதவிதமான வடிவங்களில் தயாரிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் அலங்காரத்திற்காக உருவான பொம்மைகள் பிளாஸ்டிக்,ரப்பர் என்ற பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டன அதற்கு பிறகு எலெக்ட்ரானிக் பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் தான் பார்பி பொம்மைகள் அறிமுகமாகி உலகெங்கும் உள்ள குழந்தைகள் அபிமானத்தை பெற்றன. அதன் பின்னர் ரோபோ மற்றும் ரிமோடில் இயங்கும் பொம்மைகள் அறிமுகமாயின.

பய உணர்வுள்ள குழந்தைகளை பொம்மைகள் ஆறுதல்படுத்தி அமைதி படுத்துவதாக உளவியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பல மருத்துவர்கள் குழந்தைகளுக்கு நல்ல பொம்மைகளை கொடுத்தே நோய்களை தீர்த்ததாக வரலாறு உண்டு.

மொம்மைகள் சேகரிப்பு உலகெங்கிலும் பலரின் உன்னத பொழுதுபோக்கு. இங்கிலாந்து நாட்டின் மகாராணி விக்டோரியா ஒரு பொம்மைகள் சேகரிப்பாளராக இருந்தவர்!

உங்கள் குழந்தைகளுக்கு அதிக பொம்மைகளை வாங்கித்தராதீர்கள். ஒரு சில மொம்மைகளையே வாங்கிக் கொடுங்கள் என்கிறார்கள் குழந்தைகள் நல ஆய்வாளர்கள். அதுவே அவர்களின் விளையாட்டு திறனையும், கிரியேடிவ் நாலெட்ஜ்யையும் மேம்படுத்தும் என்கிறார்கள் ஜர்னல் ஆப் பிகேவியர் அனடு டெவலப்மெண்ட் பத்திரிகை ஆய்வாளர்கள்

காற்றை நிரப்பி விளையாடும் பொம்மைகளை சிறு குழந்தைகள் விளையாட வாங்கி தராதீர்கள் என்கிறார்கள் பெர்லின் பிராசஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர்கள். காற்று அடைத்து விளையாடும் பொம்மைகளை பெரும்பாலும் பாலிபினையல் குளோரைடு எனும் பொருளால் செய்யப்படுகின்றன. இவை நாளடைவில் கெட்டுப்போய் நச்சை வெளிப்படுத்தி குழந்தைகள் உடலில் கேன்சர் காரணிகளை ஊக்குவிக்கும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com